Monday, September 3, 2018

Bhajans (பஜனைப் பாடல்கள்) 01


In this upload the following bhajans are given. You can visit YouTube "Bhajans 01   (Srinivasan)" for the audio.
இந்தப் பகுதியில் கீழ்க்கண்ட பஜனைப் பாடல்கள் இடம் பெறுகின்றன. இவற்றின் ஒலி வடிவத்தை யூ ட்யூபின் "Bhajans 01   (Srinivasan)" ல் கீழே காணலாம்.




https://www.youtube.com/watch?v=e3mYBWZ7-_A

மாண்ட்                ஆதி

பிள்ளையார் பிள்ளையார் பாரில் எங்கும் பிள்ளையார்
பாரில் எங்கும் பிள்ளையார் பாபம் தீர்க்கும் பிள்ளையார்
பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார்                 
பிள்ளையார் பிள்ளையார் பெருமை அளிக்கும் பிள்ளையார் (பிள்ளையார்)

மலைதனிலே முருகனுடன் மயிலேறி விளையாடி
மஹாதேவன் மனமதனை மகிழவைத்த பிள்ளையார்
கயிலையிலே கந்தனுடனே கைகோர்த்து விளையாடி
காமாக்ஷி மனமதனைக் குளிர வைத்த பிள்ளையார் (பிள்ளையார்)

காதைக்கிள்ளி கஷ்டம் தந்த கந்தன் மீது கோபம் கொண்டு
கண்கள் பன்னிரண்டையும் கணக்கெடுத்த பிள்ளையார்
தும்பிக்கையை அளவெடுத்த தம்பி மீது கோபம் கொண்டு
தகப்பனிடம் ஓடி வந்து தாவா செய்த பிள்ளையார் (பிள்ளையார்)

யானைமுகம் கொண்டவர் ஐந்து கரங்கள் உடையவர்
பானை வயிறு படைத்தவர் பக்தர் குறையைத் தீர்த்தவர்
ஆறுமுக வேலனுக்கு அண்ணனான பிளையார்
நேரும் துன்பம் யாவையும் நீக்கி வைக்கும் பிள்ளையார் (பிள்ளையார்)

PiLLaiyAr piLLaiyAr pAril engum piLLaiyAr
PAril engum piLLaiyAr pApam tIrkkum piLLaiyAr
PiLLaiyAr piLLaiyAr perumai vAynda piLLaiyAr
PiLLaiyAr piLLaiyAr perumai aLikkum piLLaiyAr (PiLLaiyAr)

MalaitanilE muruganuDan mayilERi viLaiyADi
MahAdEvan manamadanai magizavaitta piLLaiyAr
KayilaiyilE kandanuDanE kaikOrttu viLaiyADi
KAmAkshi manamadanaik kuLira vaitta piLLaiyAr (PiLLaiyAr)

KAdaikkiLLi kashTam tanda kandan mIdu kOpam koNDu
KaNgaL panniraNDaiyum kaNakkeDutta piLLaiyAr
tumbikkaiyai aLaveDutta tambi mIdu kOpam koNDu
tagappaniDam ODi vandu dAvA seyda piLLaiyAr (PiLLaiyAr)

YAnaimukham koNDavar aindu karangaL uDaiyavar
PAnai vayiRu paDaittavar bhaktar kuRaiyait tIrttavar
ARumukha vElanukku aNNanAna piLaiyAr
nErum tunbam yAvaiyum nIkki vaikkum piLLaiyAr (PiLLaiyAr)


(பஜன்) கானடா     ஆதி

அபயம் கொடுப்பாய் அம்மா சரணம்
ஆதி பராசக்தி அம்பிகே சரணம்
இன்பம் தருவாய் ஈஷ்வரி சரணம்
ஈஷன் மனோன்மணி பார்வதி சரணம்

உத்தம நாயகி உமையே சரணம்
ஊகாதீத சக்தியே சரணம்
எங்களுக்கருள்வாய் அம்மா சரணம்
ஏனோ பராமுகம் அம்மா சரணம்

ஐங்கரன் தாயே அம்பிகே சரணம்
ஒப்பிலா மணியே அம்மா சரணம்
ஓம்கார ரூபிணி காளியே சரணம்
அபர்ணா சரணம் அம்மா சரணம்
ஸுந்தரி ஸௌந்தரி ஷுபகரி சரணம்

(Bhajan) KAnaDA     Adi

abhayam koDuppAy ammA saraNam
Adi parAsakthi ambikE saraNam
inbam taruvAy Ishwari saraNam
Ishan manOnmaNi PArvati saraNam
uttama nAyaki umaiyE saraNam
UgAtIta sakthiyE saraNam
engaLukkaruLvAy ammA saraNam
EnO parAmukham ammA saraNam
ainkaran tAyE ambikE saraNam
oppilA maNiyE ammA saraNam
OmkAra rUpiNi kALiyE saraNam
aparNA saraNam ammA saraNam
Sundari Saundari Shubhakari saraNam


மாண்ட்               பங்களூர் A R ரமணி அம்மாள்

பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார் (2)
ஆற்றங்கரை மீதிலே அரச மரத்தின்  நிழலிலே
வீற்றிருக்கும் பிள்ளையார் வினைகள் தீர்க்கும் பிள்ளையார் (பிள்ளையார்)

யானைமுகம் கொண்டவர் ஐந்து கரங்கள் உடையவர்
பானை வயிறு படைத்தவர் பக்தர் குறை தீர்த்தவர்
மஞ்சளிலே செய்யினும் மண்ணிலே செய்யினும்
ஐந்தெழுத்து மந்திரத்தை நெஞ்சில் நாட்டும் பிள்ளையார்

ஓம் நம: ஷிவாயவென்ற ஐந்தெழுத்து மந்திரத்தை
நெஞ்சில் நாட்டும் பிள்ளையார்
ஓம் நம: ஷிவாயவென்ற ஐந்தெழுத்து மந்திரத்தை
நினைவில் நிறுத்தும் பிள்ளையார்

ஆறுமுக வேலனுக்கு அண்ணனான பிள்ளையார்
நேரும் துன்பம் யாவையும் நீக்கி வைக்கும் பிள்ளையார் (பிள்ளையார்)

கலியுகத்தில் விந்தையைக் காணவேண்டி அனுதினம்
எலியின் மீது ஏறியே இஷ்டம் போலச் சுற்றுவார்
ஜய கணேஷ ஜய கணேஷ ஜய கணேஷ பாஹிமாம்
ஸ்ரீ கணேஷ ஸ்ரீ கணேஷ ஸ்ரீ கணேஷ ரக்ஷமாம்

MAND      Bangalore A R Ramani Ammal

PiLLaiyAr piLLaiyAr perumai vAynda piLLaiyAr (2)
ARRangarai mIdilE arasa marattinnizhalilE
vIRRirukkum piLLaiyAr vinaigaL tIrkkum piLLaiyAr (PiLLaiyAr)

YAnaimukham koNDavar aindu karangaL uDaiyavar
PAnai vayiRu paDaittavar bhaktar kuRai tIrttavar
manjaLilE seyyinum maNNilE seyyinum
aindezuttu mandirattai nenjil nATTum piLLaiyAr

Om namas shivAyavenRa aindezuttu mandirattai
nenjil nATTum piLLaiyAr ninaivil niRuttum piLLaiyAr
Om nama:shivAya shivAya nama Om
Om nama: shivAyavenRa aindezuttu mandirattai
nenjil nATTum piLLaiyAr

ARumukha vElanukku aNNanAna piLLaiyAr
nErum tunbam yAvaiyum nIkki vaikkum piLLaiyAr (PiLLaiyAr)

Kaliyugattil vindaiyaik kANavENDi anudinam
eliyin mIdu ERiyE ishTam pOlac cuRRuvAr
Jaya GaNEsha Jaya GaNEsha Jaya GaNEsha PAhimAm
SrI GaNEsha SrI GaNEsha SrI GaNEsha rakshamAm


யமுனாகல்யாணி (பஜன்)      ஆதி

அன்பருக்கு அன்பனே நீ வா வா முருகா
ஆறு படை வீடுடையாய் வா வா முருகா
இன்பமய ஜ்யோதியே நீ வா வா முருகா
ஈசன் உமை பாலகனே வா வா முருகா (2)

உரக நாபன் மருகனே நீ வா வா முருகா
ஊமைக்கருள் புரிந்தவனே வா வா முருகா
எட்டுக்குடி வேலவனே வா வா முருகா
ஏறுமயில் ஏறியே நீ வா வா முருகா (2)

ஐங்கரனுக்கிளையவனே வா வா முருகா
அகில லோக நாயகனே வா வா முருகா
ஓடி வா நீ ஓடி வா நீ வா வா முருகா
ஆடி வா நீ ஆடி வா நீ வா வா முருகா (2)

ஒய்யாரி வள்ளி லோலா வா வா முருகா
ஓங்கார தத்துவமே வா வா முருகா (2)
ஔவைக்குபதேசித்தவா வா வா முருகா 
அன்னை உமை பாலகனே வா வா முருகா 

ஆடி வா நீ ஆடி வா நீ வா வா முருகா
அம்மையப்பன் பாலகனே வா வா முருகா (2)

YamunAkalyANi (Bhajan)      Adi

anbarukku anbanE nI vA vA MurugA
ARu paDai vIDuDaiyAy vA vA MurugA
inbamaya jyOtiyE nI vA vA MurugA
Isan umai bAlakanE vA vA MurugA (2)

uraga nAbhan maruganE nI vA vA MurugA
UmaikkaruL purindavanE vA vA MurugA
eTTukkuDi vElavanE vA vA MurugA
ERumayil ERiyE nI vA vA MurugA (2)

ainkaranukkiLaiyavanE vA vA MurugA
akila lOka nAyakanE vA vA MurugA
ODi vA nI ODi vA nI vA vA MurugA
ADi vA nI ADi vA nI vA vA MurugA (2)

oyyAri vaLLi lOlA vA vA MurugA
OnkAra tattuvamE vA vA MurugA (2)
auvaikkupadEsittavA vA vA MurugA 
annai umai bAlakanE vA vA MurugA 
ADi vA nI ADi vA nI vA vA MurugA
ammaiyappan bAlakanE vA vA MurugA (2)


மாண்ட் (பஜன்)         ஆதி

அன்பே சிவமாய் அணைப்பாள் நம்மை அன்னை பராசக்தி
ஆறுதல் சொல்லி அமுதம் பொழிவாள் அன்னை பராசக்தி
இப்புவி இன்பம் வேண்டாம் என்பாள் அன்னை பராசக்தி
ஈடில்லாத காக்ஷி அளிப்பாள் அன்னை பராசக்தி
ஸ்ரீ தேவி பராசக்தி

உயர்வு தாழ்வு ஒன்றும் பாராள் அன்னை பராசக்தி
ஊக்கம் இருந்தால் போதும் என்பாள் அன்னை பராசக்தி
எங்கும் நிறைந்த ஜ்யோதி அளிப்பாள் அன்னை பராசக்தி
ஏகாக்ஷரமாய் எங்குமே நிற்பாள் அன்னை பராசக்தி
ஜய் தேவி பராசக்தி

ஐங்கர நாதனை ஆதியில் தந்தாள் அன்னை பராசக்தி
ஒட்யாண பீடத்தில் அமர்வாள் அன்னை பராசக்தி
ஓம் ஓம் ஓமென்றாலே அன்னை பராசக்தி
ஓமென்றாலே ஆடியும் வருவாள் அன்னை பராசக்தி
ஜய் தேவி பராசக்தி

அவ்வை எனவே அவனியில் வந்தாள் அன்னை பராசக்தி
அஃகென்றிணைந்து ப்ரபஞ்சங்கள் யாவிலும் அன்னை பராசக்தி
ஆனந்தம் பொங்கப் பரவியே நிற்பாள் அன்னை பராசக்தி
ஆத்மாவாக நம்முள் ஒளிர்வாள் அன்னை பராசக்தி
ஸ்ரீ தேவி பராசக்தி ஜய் தேவி பராசக்தி

MAND (Bhajan)         Adi

anbE sivamAy aNaippAL nammai annai parAshakthi
ARudal solli amudam pozhivAL annai parAsakthi
ibbhuvi inbam vENDAm enbAL annai parAsakthi
IDillAda kAkshi aLippAL annai parAsakthi
SrI dEvi parAsakthi

uyarvu tAzhvu onRum pArAL annai parAsakthi
Ukkam irundAl pOdum enbAL annai parAsakthi
engum niRainda jyOti aLippAL annai parAsakthi
EkAksharamAy engumE niRpAL annai parAsakthi
Jay dEvi parAsakthi

ainkara nAthanai Adiyil tandAL annai parAsakthi
oDyANa pIDattil amarvAL annai parAsakthi
Om Om OmenRAlE annai parAsakthi
OmenRAlE ADiyum varuvAL annai parAsakthi
Jay dEvi parAsakthi

avvai enavE avaniyil vandAL annai parAsakthi
akkenRiNaindu prapanjangaL yAvilum annai parAshakti
Anandam pongap paraviyE niRpAL annai parAshakti
AtmAvAga nammuL oLirvAL annai parAsakthi
SrI dEvi parAsakthi Jay dEvi parAsakthi


ராகமாலிகை          ஆதி

தேஷ்

எல்லாம் அவன் செயலடா நம்மால் எதுவும் நடவாதடா……..
வல்லான் அவனே………யடா வையத்தலைவனடா
புல்லுக்….கு உணவளிக்கும் புனிதனும் அவனே….யடா………..
அல்லும் பகற்பொழுதும் அவன் துணை என்று இருடா……
பொல்லாவினை………களெல்லா…….ம் புகைந்து மறையு……மடா (எல்லாம்)

பீம்ப்லாஸ்

சொல்லில் அடங்காதடா முருகன் ஸ்வர்ண வடிவமடா
காதல் தெய்வமடா முருகன் கவிதைச் செல்வனடா
ஓதும் இதயமெல்லாம் அன்பு மனம் தானடா முருகன்
அன்பருக்கு அருகனடா இன்ப முகத்தனடா முருகன்
எங்கும் நிறைந்தானடா (எல்லாம்)

rAgamAlikai          Adi

dEsh

ellAm avan seyalaDA nammAl eduvum naDavAdaDA……..
VallAn avanE………yaDA vaiyattalaivanaDA
Pulluk…..ku uNavaLikkum punidanum avanE…..yaDA………..
allum pagaRpozhudum avan tuNai enRu iruDA……
PollAvinai……….gaLellA……..m pugaindu maRaiyu……maDA (ellAm)

BImplAS

Collil aDangAdaDA Murugan SwarNa vaDivamaDA
KAdal deyvamaDA Murugan kavidaic celvanaDA
Odum idayamellAm anbu manam tAnDA Murugan
anbarukku aruganaDA inba mukhattanaDA Murugan
engum niRaindAnaDA (ellAm)


கதன குதூஹலம்          ரூபகம்

ஆஞ்ஜனேயம் அதி பாடலானனம்
காஞ்சனாத்ரி கமனீய விக்ரஹம்|
பாரிஜாத தருமூல வாஸினம்
பாவயாமி பவமான நந்தனம்||

யத்ர யத்ர ரகுநாத கீர்த்தனம்
தத்ர தத்ர க்ருதமஸ்தகாஞ்சலிம்|
பாஷ்பவாரி பரிபூர்ணலோசனம்
மாருதிம் நமத ராக்ஷஸாந்தகம்||

மனோஜபம் மாருத துல்ய வேகம்
ஜிதேந்த்ரியம் புத்திமதாம் வரிஷ்டம்|
வாதாத்மஜம் வானரயூத முக்யம்
ஸ்ரீ ராமதூதம் ஷிரஸா நமாமி||

Kathana kutUhalam          rUpakam

AnjanEyam ati pATalAnanam
kAncanAdri kamanIya vigraham|
pArijAta tarumUla vASinam
bhAvayAmi pavamAna nandanam||

yatra yatra raghunAtha kIrtanam
tatra tatra krutamaStakAnjalim|
bAshpavAri paripUrNalOcanam
mArutim namata rAkshaSAntakam||

manOjapam mAruta tulya vEgam
jitEndriyam buddhimatAm varishTam|
vAtAtmajam vAnarayUda mukhyam
srI rAmadUtam shiraSA namAmi||


பாகேஸ்ரீ                  ஆதி


ஆற்றங்கரை ஓரத்திலே அரச மரத்தடியிலே
வீற்றிருக்கும் பிள்ளையார் வினைகள் தீர்க்கும் பிள்ளையார் (ஆற்றங்கரை)

அப

அவல் கடலை சுண்டலும் அரிசி கொழுக்கட்டையும்
கவலையின்றித்தின்னுவார் கண்மூடித்தூங்குவார் (ஆற்றங்கரை)


மஞ்சளிலே செய்யினும் மண்ணிலே செய்யினும்
ஐந்தெழுத்து மந்திரத்தை நெஞ்சில் நாட்டும் பிள்ளையார்
ஓம் நமச் சிவாயவென்ற ஐந்தெழுத்து மந்திரத்தை
நெஞ்சில் நாட்டும் பிள்ளையார் நினைவில் நிறுத்தும் பிள்ளையார் (ஆற்றங்கரை)

BAgESrI                        Adi

Pa

ARRangarai OrattilE arasa marattaDiyilE
vIRRirukkum piLLaiyAr vinaigaL tIrkkum piLLaiyAr (ARRangarai)

a.pa

aval kaDalai suNDalum arisi kozukkaTTaiyum
kavalaiyinRittinnuvAr kaNmUDittUnguvAr (ARRangarai)

Ca

ManjaLilE seyyinum maNNilE seyyinum
aindezuttu mandirattai nenjil nATTum piLLaiyAr
Om nama: ShivAyavenRa aindezuttu mandirattai
nenjil nATTum piLLaiyAr ninaivil niRuttum piLLaiyAr (ARRangarai)


மாண்ட்/baageshwabbபாகேஷ்வரீ         ஆதி        ஸந்த் கபீர் பஜன்

பீத் க3யே தி3ன் ப4ஜன் பி3னா ரே
4ஜன் பி3னா ரே4ஜன் பி3னா ரே (பீத் கயே)

பா3ல் அவஸ்தா2 கே2ல் க3வாயோ
ஜப் யௌவன் தப்3 மான் க4னா ரே (பீத் கயே)

லாஹே காரண் மூல் க3வாயோ
அஜஹும் ந கயீ மன் கீ த்ருஷ்ணா ரே (பீத் கயே)

கஹத் கபீர் ஸுனோ ப4யீ ஸாதோ4
பார் உதர் க3யே ஸந்த் ஜனா ரே (பீத் கயே)

MAND/BhAgEshwarI         Adi        Sant Kabir Bhajan

bIt gayE din bhajan binA rE |
bhajan binA rE, bhajan binA rE ||

bAla avasthA khEla gavAyO |
jab yauvan tab mAn ghanA rE ||

lAhE kAraNa mUla gavAyO |
ajahU na gayI man kI trushNA rE ||

kahat kabIr sunO bhayI SAdhO |
pAr utar gayE sant janA rE ||



கமாஜ்              ஆதி

சொல்லச் சொல்லத் தித்திக்குமே ஸுந்தரனின் நாம ரஸம்
எல்லையில்லா இன்பம் தந்து எங்கும் தானாய் நின்ற ரஸம்
வல்வினை ஒழிந்துவிடும் வஞ்சனை எரிந்து விடும்
கல் நெஞ்சம் உருகி விடும் கால பயம் ஓடி விடும் (சொல்ல)

கல்லாததை அறிய வைக்கும் கருணை உள்ளம் படைக்க வைக்கும்
நல்லதை நாட வைக்கும் நானென்பதொழிய வைக்கும்
கால நிலை கருத வேண்டாம் காடு மலை சுற்ற வேண்டாம்
மேலான தவமொன்றும் வேண்டாம் மேன்மையெல்லாம் தானே வரும் (சொல்ல)

KhamAj             Adi

Collac collat tittikkumE Sundaranin nAma raSam
ellaiyillA inbam tandu engum tAnAy ninRa raSam
valvinai ozhinduviDum vanjanai erindu viDum
Kal nenjam urugi viDum kAla bhayam ODi viDum
KallAdadai aRiya vaikkum karuNai uLLam paDaikka vaikkum
nalladai nADa vaikkum nAnenbadozhiya vaikkum
KAla nilai karuda vENDAm kADu malai cuRRa vENDAm
mElAna tavamonRum vENDAm mEnmaiyellAm tAnE varum (Colla)



2 comments: