Saturday, September 8, 2018

Bhajans (பஜனைப் பாடல்கள்) 03


In this upload the following bhajans are given. You can visit YouTube "Bhajans 03   (Srinivasan)" for the audio.

இந்தப் பகுதியில் கீழ்க்கண்ட பஜனைப் பாடல்கள் இடம் பெறுகின்றன. இவற்றின் ஒலி வடிவத்தை யூ ட்யூபின் "Bhajans 03  (Srinivasan)" ல் காணலாம்.


YouTube Link (யூ ட்யூபின் இணைப்பு):  https://www.youtube.com/watch?v=l_L-xy23PiM&feature=youtu.be


செஞ்சுருட்டி/யதுகுல காம்போஜி   (மார்கழி மாதம் திருவாதிரை நாள் மெட்டு)      ஆதி

மிட்டாயிருக்குது மிட்டாயிருக்குது வாருங்கள் பக்தர்களே
மிட்டாயிருக்குது மிக நேர்த்தியான மிட்டாய் விட்டால் வராத மிட்டாய்

ஆத்ம மிட்டாயிது ஜகம் தனிலே மிக அருமையான மிட்டாய்
பரமாத்மாவெனும் பதத்தினால் செய்த  பக்தர்களுக்கான மிட்டாய் (மிட்டாயிருக்குது)

சுருக்கமாகவே இரண்டெழுத்துள்ள ஸூக்ஷ்மமான மிட்டாய்
வருத்தமின்றித் தொண்டர் வகையாகப் பாடும் மிட்டாய் ஸத்குரு நாத மிட்டாய் (மிட்டாயிருக்குது)

ஆதியில் அயனுக்காக மத்ஸ்யாவதாரம் ஆனது இந்த மிட்டாய்
ஹிரண்யாக்ஷனைக் கொல்ல வராஹவதாரம் ஏற்றதும் இந்த மிட்டாய் (மிட்டாயிருக்குது)

ப்ரஹ்லாதனுக்காகத் தூணிலிருந்து வந்த நரஸிம்ஹ மிட்டாய்
மஹாபலி மன்னனின் மமதையை அடக்க வாமனனான மிட்டாய் (மிட்டாயிருக்குது)

கார்த்தவீர்யனின் கர்வத்தையடக்கிய பரசுராம மிட்டாய்
ராவணனைக் கொல்லக் கோதண்ட ராமனாய் அவதரித்த மிட்டாய் (மிட்டாயிருக்குது)

கண்ணனுக்கு அண்ணனாய் பாரினில் தோன்றிய  பல ராம மிட்டாய்
கம்ஸனைக் கொல்ல அவதாரம் செய்த பாலகோபால மிட்டாய் (மிட்டாயிருக்குது)

கலியுகம் இதனில் கண்கண்ட தெய்வமாய் கண்ணனான மிட்டாய்
பஞ்சபாண்டவர்கள் பகுத்தறிந்து நல்ல பயிற்சி பெற்ற மிட்டாய் (மிட்டாயிருக்குது)

கொஞ்சும் கிளிகளெல்லாம் ரங்கா ரங்காயென்று கோரித்தின்னும் மிட்டாய்
நானும் நீங்களும் கூடி ஆனந்தமாகப் பஜனை செய்யும் மிட்டாய் (மிட்டாயிருக்குது)

இந்த மிட்டாய் உங்கள் சொந்த மிட்டாய் விட்டால் வராத பேரின்ப மிட்டாய்
ராம ராம எனும் நாமமாய் எங்கும் பரவி ஒலிக்கும்  மிட்டாய் (மிட்டாயிருக்குது)

Yadukula KAmbhOji   (MArgazhi mAdam tiruvAdirai nAL tune)      Adi

MiTTAyirukkudu miTTAyirukkudu vArungaL bhaktargaLE
MiTTAyirukkudu miga nErttiyAna viTTAl varAda miTTAy

Atma miTTAyidu jagam tanilE miga arumaiyAna miTTAy
ParamAtmAvenum padattinAl seyda bhaktargaLukkAna miTTAy (MiTTAyirukkudu)

CurukkamAgavE iraNDezhuttuLLa SUkshmamAna miTTAy
varuttaminRit toNDar vagaiyAgap pADum Sadguru nAtha miTTAy (MiTTAyirukkudu)

Adiyil ayanukkAga matSyAvatAram Anadu inda miTTAy
HiraNyAkshanaik kolla varAhavatAram ERRadum inda miTTAy (MiTTAyirukkudu)

PrahlAdanukkAgat tUNilirundu vanda naraSimha miTTAy
MahAbali mannanin mamadaiyai aDakka vAmananAna miTTAy (MiTTAyirukkudu)

KArttavIryanin garvattaiyaDakkiya ParasurAma miTTAy
rAvaNanaik kollak kOdaNDa rAmanAy avadaritta miTTAy (MiTTAyirukkudu)

KaNNanukku aNNanAy pArinil tOnRiya  Bala rAma miTTAy
KamSanaik kolla avatAram seyda BAlagOpAla miTTAy (MiTTAyirukkudu)

Kaliyugam idanil kaNkaNDa deyvamAy KaNNanAna miTTAy
PancaPANDavargaL paguttaRindu nalla payiRci peRRa miTTAy (MiTTAyirukkudu)

Konjum kiLigaLellAm rangA rangAyenRu kOrittinnum miTTAy
nAnum nIngaLum kUDi AnandamAgab bhajanai seyyum miTTAy (MiTTAyirukkudu)

inda miTTAy ungaL sonda miTTAy viTTAl varAda pErinba miTTAy
rAma rAma enum nAmamAy engum paravi olikkum  miTTAy (MiTTAyirukkudu)


கிளிக்கண்ணி மெட்டு   பைரவி
                     
நீல மயிலேறும் கோல முருகனை
நித்தம் பணிந்திட வாருங்கடி
ஆலகாலம் உண்ட நீலகண்டன் கொஞ்சும்
அன்புள்ள பாலனைப் பாருங்கடி

சூலி சிவகாமி தாவி முத்தமிடும்
ஸுந்தர பாலனைப் பாருங்கடி
காலிற் சிலம்பொலி கல் கலென வரும்
கந்தன் அழகினைப் பாருங்கடி

சின்ன முனிவர்க்குச் செந்தமிழ் அமுதை
அன்புடன் பருகத் தந்தவன்டி
வண்ண மயிலேறும் வள்ளலை வாழ்த்தினால்
வந்தின்பம் தருவான் பாருங்கடி

வேலுடன் வந்தன்பர் வேதனை தீர்த்தின்பம்
வேண்ட வேண்டத் தரும் மெய்யனடி
நாலு வேதப் பொருள் ஆறு ஸமயத்து
நாயகன் நம்முயர் அய்யனடி (நீல)

ஓலமிட்ட சூரன் காலனூர் புக்கிட
ஒய்யாரப்போர் செய்த வீரனடி
சீலமெல்லாம் தந்து தேவர்கள் நாட்டிற்கு
ஸேனாபதியான தீரனடி

கால நிலைகளைக் கருதாத அன்பர்க்குக்
கருணை பொழியும் கந்தனடி
பால வடிவன் என் பதி கதிர் காமன்
பக்தர்களுக்கென்றும் சொந்தனடி (நீல)

KiLikkaNNi meTTu   Anandabhairavi

nIla mayilERum kOla muruganai
nittam paNindiDa vArungaDi
AlakAlam uNDa nIlakaNTan konjum
anbuLLa bAlanaip pArungaDi

sUli sivakAmi tAvi muttamiDum
Sundara bAlanaip pArungaDi
KAliR silamboli gal galena varum
Kandan azhaginaip pArungaDi

cinna munivarkkuc centamizh amudai
anbuDan parugat tandavanDi
VaNNa mayilERum vaLLalai vAzhttinAl
Vandinbam taruvAn pArungaDi

VEluDan vandanbar vEdanai tIrttinbam
VENDa vENDat tarum meyyanaDi
nAlu vEdap poruL ARu Samayattu
nAyakan nammuyar ayyanaDi (nIla)

OlamiTTa sUran kAlanUr pukkiDa
oyyArappOr seyda vIranaDi
sIlamellAm tandu dEvargaL nATTiRku
SEnApatiyAna dhIranaDi

KAla nilaigaLaik karudAda anbarkkuk
KaruNai pozhiyum KandanaDi
BAla vaDivan en pati kadir kAman
BhaktargaLukkenRum sondanaDi (nIla)


மிஷ்ர மாண்ட்              திஷ்ர ஏகம் (ரூபகம்)       ஆடுவோமே பள்ளு மெட்டு    

ஓடி வா வா க்ருஷ்ணா ஓடி வா வா 
ஓங்கார நாதக்குழல் ஊதிக்கொண்டென் அருகில் (ஓடி)

உன் திரு நாமங்கள் ஓதி வந்தேனே ஓயாமல்
உன் பெருமை புகழ்ந்தேனே உன்னடியார் சேவை
புரிந்தேனே உனதடி மலரினைப் பணிந்தேனே (ஓடி)

கருணை என் மேல் பொழிவாய் கமலக்கண்ணா
காமகோடி ஸுந்தரனே கார்முகில் வண்ணா
கனக நிறை சேலை இடையோனே கான மயில்
தோகையணி முடியோனே (ஓடி)

அன்பர் குலம் காக்கத் துணிந்தவனே
ஆடும் மணி குண்டலங்கள் அணிந்தவனே
அச்யுதனே இங்கு வருவாயோ
அற்புதக் காட்சி எனக்குத் தருவாயோ (ஓடி)

பொன்னடியில் தங்கச் சிலம்போசை
பொன்னரையில் தங்கரணாள் கிண் கிணி ஓசை
புன்னகை திருவாயில் குழலோசை
பரிபூரணமாய்த் தந்தருள்வாய் எங்கள் ஆசை (ஓடி)

Mishra MAND     tishra Ekam (rUpakam) ADuvOmE paLLu meTTu    

ODi vA vA krushNA ODi vA vA 
OnkAra nAdakkuzhal UdikkoNDen arugil (ODi)

un tiru nAmangaL Odi vandEnE OyAmal
un perumai pugazhndEnE – unnaDiyAr sEvai
PurindEnE – unadaDi malarinaip paNindEnE (ODi)

KaruNai en mEl pozhivAy kamalakkaNNA
KAmakOTi SundaranE kArmugil vaNNA
Kanaka niRai sElai iDaiyOnE gAna mayil
tOgaiyaNi muDiyOnE (ODi)

anbar kulam kAkkat tuNindavanE
ADum maNi kuNDalangaL aNindavanE
achyutanE ingu varuvAyO
aRpudak kATci enakkut taruvAyO (ODi)

PonnaDiyil tangac cilambOsai
Ponnaraiyil tangaraNAL giN giNi Osai
Punnagai tiruvAyil kuzhalOsai
ParipUraNamAyt tandaruLvAy engaL Asai (ODi)


ஸஹானா/த்விஜாவந்தி (ஹாரதி)     மிஷ்ரசாபு

ஓம் ஜய ஜய ஜய சக்தி ஓம் ஸ்ரீ ஜய ஜய ஜய சக்தி
ஜய ஜய என தினம் பாடிப்பணிந்தோம் (2) ஜகமெங்கும் அமைதியைத்தா (ஓம் ஸ்ரீ) (2)

த்ருப்தியும் இன்பமும் வாழ்வில் துலங்கத் தேவையெல்லாம் அடைய அம்மா
பக்தி பெருகிடப் பாடி உருகிடப் (2) பணிப்பாய் அன்பிலெமை (ஓம் ஸ்ரீ) 

இரண்டுகள் போக மூன்றுகள் அகல ஈஷ்வரி வரம் அருள்வாய்
அம்மம்மா ஈஷ்வரி வரம் அருள்வாய்
கரம் குவித்தோம் இனி காலை விடோமடி  (2) கருணையுடன் அணைப்பாய் (ஓம் ஸ்ரீ) (ஓம் ஜய)

காசினி எங்கும் வேற்றுமை போகக் கருத்தினில் அன்பருள்வாய்
அம்மம்மா கருத்தினில் அன்பருள்வாய்
தேசுடன் வாழக் காட்டடி காக்ஷி (2) தேவியுன் அடைக்கலமே (ஓம் ஸ்ரீ) (ஓம் ஜய)

நமஸ்காரம் இருவினை கருத்தினில் ஞான நல்லொளி தீபம் வைத்து 
ஞான நல்லொளி தீபம் வைத்து 
நமஸ்காரம் செய்து ஹாரதி எடுத்தோம் (2) ஞாலத்திற்கமைதியைத்தா (ஓம் ஸ்ரீ) (ஓம் ஜய)

ஓம் கணபதி ஸாயி ஷண்முக நாதா ஓம் த்ரிகுணாதீதா க்ருஷ்ணா
ஓம் த்ரிகுணாதீதா  
ஓம் ஸ்ரீ ராம மஹாதேவ ஷம்போ (2) ஓம் ஜய ஜகஜ்ஜனனி (ஓம் ஸ்ரீ) (ஓம் ஜய)

SahAnA/dwijAvanti (Harati)     MishracApu

Om Jaya jaya jaya Shakthi Om SrI jaya jaya jaya Shakthi
Jaya jaya ena dinam pADippaNindOm (2) jagamengum amaidiyaittA (Om SrI) (Om Jaya) (2)

truptiyum inbamum vAzhvil tulangat tEvaiyellAm aDaiya
Bhakti perugiDap pADi urugiDap (2) paNippAy anbilemai (Om SrI) (Om Jaya)

iraNDugaL pOga mUnRugaL agala Ishwari varam aruLvAy
ammammA Ishwari varam aruLvAy
Karam kuvittOm ini kAlai viDOmaDi  (2) karuNaiyuDan aNaippAy (Om SrI) (Om Jaya)

KAsini engum vERRumai pOgak karuttinil anbaruLvAy
ammammA karuttinil anbaruLvAy
tEsuDan vAzhak kATTaDi kAkshi (2) dEviyun aDaikkalamE (Om SrI) (Om Jaya)

namaSkAram iruvinai karuttinil ~nAna nalloLi dIpam vaittu 
~nAna nalloLi dIpam vaittu 
namaSkaram seydu HArati eDuttOm (2) ~nAlattiRkamaidiyaittA (Om SrI) (Om Jaya)

Om GaNapati SAyi ShaNmukha nAthA Om triguNAtItA KrushNA
Om triguNAtItA  
Om SrI rAma mahAdEva ShambhO (2) Om jaya jagajjanani (Om SrI) (Om Jaya)


ராகமாலிகை வ்ருத்தம் (கடுக்கன் த்யகராஜ தேசிகர் 350 வருடங்களுக்கு முன் இயற்றிய ஸ்வாமிமலை திருவேரக நவரத்ன மாலையின் பகுதி. முருகன் பாடல்களுக்கானது)

கேதாரகௌளை/தர்பாரி கானடா

ஒரு தரம் சரவணபவா என்று சொல்பவர்
உளத்தினில் நினைத்த எல்லாம்
உடனே கைகூடுமென வேதங்கள் மொழியுதே
உண்மை அறிவான பொருளே

கீரவாணி/ஸிம்மேந்த்ரமத்யமம்

பரிவாகவே அனந்தம் தரம் சரவண
பவாவென்று நான் சொல்லியும்
பாங்குமிகு காங்கேயா! அடியனேன்
எண்ணியது பலியாதிருப்பதேனோ?

மோஹனம்

குருபரா! முருகையா! கந்தா! கடம்பா!
சொல் குமரா! குஹா! ஷண்முகா!
கோலாஹலா! வெற்றிவேலா! எனக்கருள்
கொடுத்தாள்வை முத்தைய்யனே

ஸஹானா

மருமலர்க் குழலக தேவகுஞ்சரி
வள்ளி மணவனே! என் துணைவனே!
வண்ண மயில் வாஹனா! பொன்னேரகப்
பதியில் வளர் ஸாமிநாத குருவே.

rAgamAlikai vruttam for Murugan songs  (Part of Swamimalai tiruveraga navaratna malai composed by Kadukkan Thyagaraja Desikar 350 years ago)

KEdAragauLai/darbhAri KAnaDA

oru taram SharavaNabhavA enRu solbavar
uLttinil ninaitta ellAm
uDanE kaikUDumena vEdangaL mozhiyudE
uNmai aRivAna poruLE

KIravANi/SimmEndramadhyamam

ParivAgavE anantam taram SharavaNa
BhavAvenRu nAn solliyum
PAngumigu GAngEyA! aDiyanEn
eNNiyadu paliyAdiruppadEnO?

MOhanam

GuruparA! MurugaiyA! KandA! KaDambA!
sol KumarA! GuhA! ShaNmukhA!
KOlAhalA! veRRivElA! enakkaruL
KoDuttALvai MuttaiyyanE

SahAnA

Marumalark kuzhalaga dEvakunjari
VaLLi MaNavanE! en tuNaivanE!
VaNNa mayil vAhanA! PonnEragap
Padiyil vaLay SaminAtha guruvE.


மிஷ்ர கமாஜ்/யமன் (தேஷ்/ஸிந்துபைரவி)               ஆதி

பல்லவி

பத்ம முகம் மணிகண்ட முகம்
அஷ்டமி சந்த்ர மதுர முகம் (பத்ம முகம்)

அபல்லவி

நத ஜன மானஸ மோஹன பிம்பம்
குவலய தளனித நளின விலாஸம்
குவலய பரிவிவ நயன விலாஸம் (பத்ம முகம்)

சரணம்

முனிஜன வாஞ்சித ஸாதன கோஷம்
ச்ரிதஜன ஹித கர ஸுர தரு கல்பம் 
திமிர நிவாரண ஷோபன தீபம்
விலஸித மதகஜ கமன விஷோகம் (பத்ம முகம்)

பாஹி பாஹி மணிகண்டா
பாவன சரிதா மணிகண்டா
அனாத ரக்ஷக மணிகண்டா
அபயப்ரதாபா  மணிகண்டா
ஆனந்த ரூபா மணிகண்டா
ஆபத்பாந்தவ மணிகண்டா
கலியுக வரதா மணிகண்டா
கரிமலை வாஸா மணிகண்டா 
கலியுக வரதா மணிகண்டா
கரிமலை வாஸா மணிகண்டா  
(இரண்டு தடவை பாடவும்)

கரிமலை வாஸா மணிகண்டா
கரிமலை வாஸா மணிகண்டா
கரிமலை வாஸா மணிகண்டா
கரிமலை வாஸா மணிகண்டா
கரிமலை வாஸா மணிகண்டா

Mishra KhamAj/Yaman (dEsh/Sindubhairavi)           Adi

Pallavi

Padma mukham MaNikaNTha mukham
ashTami candra madhura mukham (Padma mukham)

a.pallavi

nata jana mAnaSa mOhana bimbham
Kuvalaya daLanita naLina vilASam
Kuvalaya pariviva nayana vilASam (Padma mukham)

CaraNam

Munijana vAncita SAdana kOsham
Critajana hita kara Sura taru kalpam 
timira nivAraNa shObana dIpam
VilaSita madagaja gamana vishOkam (Padma mukham)

PAhi PAhi MaNikaNThA
PAvana caritA MaNikaNThA
anAtha rakshaka MaNikaNThA
abhayapradApA  MaNikaNThA
Ananda rUpA MaNikaNThA
ApadbAndava MaNikaNThA
Kaliyuga varadA MaNikaNThA
Karimalai vASA MaNikaNThA 
Kaliyuga varadA MaNikaNThA
Karimalai vASA MaNikaNThA  
(Sing pAhi to karimalai vASA twice)

Karimalai vASA MaNikaNThA
Karimalai vASA MaNikaNThA
Karimalai vASA MaNikaNThA
Karimalai vASA MaNikaNThA
Karimalai vASA MaNikaNThA


பீம்ப்லாஸ்            ஆதி

பால் மணக்குது பழம் மணக்குது பழனி மலையிலே
பாரைச் சுத்தி முருக நாமம் எங்கும் ஒலிக்குதாம்
பழனி மலையைச் சுத்தி முருக நாமம் எங்கும் ஒலிக்குதாம்
முருகா உன்னைத் தேடித் தேடி எங்கும் காணேனே அப்பப்பா (முருகா)
                         
எங்கும் தேடி உன்னைக்காணா மனமும் வாடுதே 
முருகா உன்னைத் தேடித் தேடி எங்கும் காணேனே 

தேனிருக்குது தினை இருக்குது தென் பழனியிலே முருகா
முருகா முருகா முருகா (தேன்) தெருவைச் சுத்திக்
காவடியாட்டம் தினமும் நடக்குதாம்
பால் காவடி பன்னீர் காவடி புஷ்பக்காவடியாம்
சக்கரைக்காவடி சந்தனக்காவடி சேவற் காவடியாம்
கற்பக்காவடி மச்சக்காவடி புஷ்ப்பக்காவடியாம்
மலையைச்சுத்திக் காவடியாட்டம் தினமும் நடக்குதாம்
வேலனுக்கு அரோஹரா முருகனுக்கு அரோஹரா
கந்தனுக்கு அரோஹரா - அதோ வராண்டி பழனி ஆறுமுகன் தாண்டி
அவன் போனாப்போறாண்டி முருகன் தானா வராண்டி
வேலிருக்குது மயில் இருக்குது வ்ராலிமலையிலே அந்த வ்ராலிமலையிலே
மலையைச் சுத்தி மயிலினாட்டம் தினமும் நடக்குதாம்
வ்ராலி மலையைச் சுத்தி மயிலினாட்டம் தினமும் நடக்குதாம்
முருகா உன்னைத் தேடித் தேடி எங்கும் காணேனே அப்பப்பா

BImplAS                        Adi

PAl maNakkudu pazham maNakkudu pazhani malaiyilE
PAraic cutti muruga nAmam engum olikkudAm
Pazhani malaiyaic cutti muruga nAmam engum olikkudAm
murugA unnait tEDit tEDi engum kANEnE appappA (murugA)

engum tEDi unnaikkANA manamum vADutE 
MurugA unnait tEDit tEDi engum kANEnE 

tEnirukkudu tinai irukkudu ten pazhaniyilE murugA
MurugA murugA murugA (tEn) – teruvaic cuttik
KAvaDiyATTam dinamum naDakkudAm
PAl kAvaDi pannIr kAvaDi pushpakkAvaDiyAm
sakkaraikkAvaDi candanakkAvaDi sEvaR kAvaDiyAm
KaRpakkAvaDi maccakkAvaDi pushppakkAvaDiyAm
Malaiyaiccuttik kAvaDiyATTam dinamum naDakkudAm
VElanukku arOharA muruganukku arOharA
Kandanukku arOharA - adO varANDi pazhani ARumukhan tANDi
avan pOnAppORANDi murugan tAnA varANDi
VElirukkudu mayil irukkudu vrAlimalaiyilE anda vrAlimalaiyilE
Malaiyaic cutti mayilinATTam dinamum naDakkudAm
VrAli malaiyaic cutti mayilinATTam dinamum naDakkudAm
MurugA unnait tEDit tEDi engum kANEnE appappA


குறிஞ்சி        ஆதி

பாசி படர்ந்த மலை முருகா பங்குனித்தேர் ஓடும் மலை
ஊசி படர்ந்த மலை உத்ராக்ஷம் காட்டும் மலை

மலைக்கு மலை நடுவே முருகா மலையாள தேசமப்பா
மலையாள தேசம் விட்டு நீயும் மயிலேறி வருவாயிங்கே

ஏறாத மலைதனிலே ..................................முருகையா
ஏறி நின்று தத்தளிக்க முருகையா பாராமல் கைகொடுப்பாய்
முருகையா  முருகையா (பாராமல்) ஐயா பழனிமலை
ஆண்டவனே முருகையா ஐயா முருகையா அப்பா முருகையா
பழனிமலை ஆண்டவனே முருகையா

வேலெடுத்து கச்சை கட்டி முருகையா ............ (வேலெடுத்து)
வித விதமாய் மயிலேறி முருகையா
தேரப்பா தைப்பூசம் முருகையா ..................
ஐயா தேசத்தோர்  கொண்டாட முருகையா அப்பா முருகையா
தேசத்தோர்  கொண்டாட முருகையா

KuRinji        Adi

PAsi paDarnda malai MurugA pangunittEr ODum malai
Usi paDarnda malai udrAksham kATTum malai

Malaikku malai naDuvE murugA malaiyALa dEsamappA
MalaiyALa dEsam viTTu nIyum mayilERi varuvAyingE

ERAda malaitanilE ...................................MurugaiyA
ERi ninRu tattaLikka MurugaiyA – pArAmal kaikoDuppAy
MurugaiyA  MurugaiyA (pArAmal) aiyA Pazhanimalai
ANDavanE MurugaiyA aiyA MurugaiyA appA MurugaiyA
Pazhanimalai ANDavanE MurugaiyA

VEleDuttu kaccai kaTTi MurugaiyA............. (vEleDuttu)
Vida vidamAy mayilERi MurugaiyA
tErappA taippUsam MurugaiyA ...................
aiyA dEsattOr  koNDADa MurugaiyA appA MurugaiyA
dEsattOr  koNDADa MurugaiyA


ஆடுவோமே பள்ளு மெட்டு

ராம நாமம் தினம் தரும் க்ஷேமம்
ராவும் பகலுமாய் பஜித்திடுவோம் ரகு (ராம)

தீராத வினை தீர்க்கும் திவ்ய நாமம் அந்த
தீரம் மிகுந்து புகழ் ஓங்கும் நாமம்
ஆராவமுதம் அளிக்கும் நாமம் அந்த
ஆனந்தமூட்டும் அரிய நாமம் (ராம)

பக்தர்களுக்காகப் பிறந்த நாமம் அந்த
பக்தர் மனதினில் வாழும் நாமம்
பக்தர்களைக்காக்கப் பிறந்த நாமம் அந்த
பக்தர் பணியும் பரந்தாம நாமம் (ராம)

மண்ணும் விண்ணும் படைத்துக் காக்கும் நாமம் அந்த
மண்ணும் விண்ணும் புகழ்ந்து போற்றும் நாமம்
எண்ணம் ஈடேற அருள் செய்யும் நாமம்
ரகு ராம நாமம்ரகு ராம நாமம் (ராம)

ADuvOmE paLLu meTTu

rAma nAmam dinam tarum kshEmam
rAvum pagalumAy bajittiDuvOm raghu (rAma)

tIrAda vinai tIrkkum divya nAmam anda
dIram migundu pugazh Ongum nAmam
ArAvamudam aLikkum nAmam anda
AnandamUTTum ariya nAmam (rAma)

BhaktargaLukkAgap piRanda nAmam anda
Bhaktar manadinil vAzhum nAmam
BhaktargaLaikkAkkap piRanda nAmam anda
Bhaktar paNiyum parandAma nAmam (rAma)

MaNNum viNNum paDaittuk kAkkum nAmam anda
MaNNum viNNum pugazhndu pORRum nAmam
eNNam IDERa aruL seyyum nAmam
raghu rAma nAmam,  raghu rAma nAmam (rAma)


பைரவி           ஆதி        (கும்மி)

ஸ்ரீ ராம ஜய ராம ஜய் ஜய ராம ஓம்
ஸ்ரீ ராம ஜய ராம ஜய் ஜய ராம்
ஸ்ரீ ராம ஜய ராம ஜய் ஜய ராம ஓம்
ஸ்ரீ ராம ஜய ராம ஜய் ஜய ராம்

கோர அஞ்ஞான நிவாரண நாமம்
கொஞ்சும் கிளிகள் கொண்டாடும் நாமம்
கோலாகலமாய் பஜனை செய்யும்
கோகில த்வனியோர் பாடும் நாமம் (ஸ்ரீ)

நிராமயமான நாமமிது நித்ய
கல்யாண குண நாமமிது
பாராதி அண்டமெல்லாம் தானாய் நின்ற
பக்தர்கள் பாடும் நாமமிது (ஸ்ரீ)

நாரத தும்புரு தேவ கணங்கள்
நாதப்ரம்மமான நாமமிது
வினாடி மறவாமல் பாடும் நாமமிது
வேதாந்தத்துள் விளையாடும் நாமம் (ஸ்ரீ)

ஆராதித்த அசுரர் குலத்தோனை
அஞ்சேல் என்று அணைத்த நாமம்
ப்ரம்மானந்தமாய் ஆஞ்ஜனேயர் தினம்
ஆடிப்பாடிக் கொண்டாடும் நாமம் (ஸ்ரீ)

அஷ்ட பஞ்சாக்ஷர தத்துவமாய் நின்ற
ஆனந்தமான நாமமிது
ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தம்
ராமதாஸர் தந்த நாமமிது (ஸ்ரீ)

கானத்துடன் பாலர் பாடும் நாமமிது
கருத்துருக்கும் நாமமிது
ஆனந்தாச்ரம வாசிகள் எல்லாம்
அன்பாகவே தினம் பாடும் நாமம்  (ஸ்ரீ)

ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி
ஓம் சக்தி ரூபமாய் நின்ற நாமம்
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி
ஆதி பராசக்தி தந்த நாமம்

ஸ்ரீ ராம ஜய ராம ஜய் ஜய ராம ஓம்
ஸ்ரீ ராம ஜய ராம ஜய் ஜய ராம்
ஸ்ரீ ராம ஜய ராம ஜய் ஜய ராம ஓம்
ஸ்ரீ ராம ஜய ராம ஜய் ஜய ராம்

Bhairavi           Adi        (Kummi)

SrI rAma jaya rAma jay jaya rAma Om
SrI rAma jaya rAma jay jaya rAm
SrI rAma jaya rAma jay jaya rAma Om
SrI rAma jaya rAma jay jaya rAm

GhOra agngnAna nivAraNa nAmam
Konjum kiLigaL koNDADum nAmam
KOlAkalamAy bhajanai seyyum
KOkila dwaniyOr pADum nAmam (SrI)

nirAmayamAna nAmamidu nitya
kalyANa guNa nAmamidu
PArAdi aNDamellAm tAnAy ninRa
BhaktargaL pADum nAmamidu (SrI)

nArada tumbhuru dEva gaNangaL
nAdabrammamAna nAmamidu
vinADi maRavAmal pADum nAmamidu
vEdAntattuL viLaiyADum nAmam (SrI)

ArAditta asurar kulattOnai
anjEl enRu aNaitta nAmam
BrammAnandamAy AnjanEyar dinam
ADippADik koNDADum nAmam (SrI)

ashTa pancAkshara tattuvamAy ninRa
AnandamAna nAmamidu
Anandam Anandam Anandam Anandam
rAmadASar tanda nAmamidu (SrI)

GAnattuDan bAlar pADum nAmamidu
Karutturukkum nAmamidu
AnandAshrama vAsigaL ellAm
anbAgavE dinam pADum nAmam  (SrI)

Om sakti Om sakti Om sakti Om sakti
Om sakti rUpamAy ninRa nAmam
Om sakti Om sakti Om sakti Om sakti
Adi ParAsakti tanda nAmam

SrI rAma jaya rAma jay jaya rAma Om
SrI rAma jaya rAma jay jaya rAm
SrI rAma jaya rAma jay jaya rAma Om
SrI rAma jaya rAma jay jaya rAm

No comments:

Post a Comment