Saturday, September 8, 2018

Bhajans (பஜனைப் பாடல்கள்) 04


In this upload the following bhajans are given. You can visit YouTube "Bhajans 04   (Srinivasan)" for the audio.

இந்தப் பகுதியில் கீழ்க்கண்ட பஜனைப் பாடல்கள் இடம் பெறுகின்றன. இவற்றின் ஒலி வடிவத்தை யூ ட்யூபின் "Bhajans 04 (Srinivasan)" ல் காணலாம்.

YouTube Link (யூ ட்யூபின் இணைப்பு): https://www.youtube.com/watch?v=eaHTT1ScGtc&feature=youtu.be     



புன்னாகவாராளி           ஆதி

ஸ்ரீ ராமா ராமா என்று ஜய மாருதி
சிந்தித்திருக்கும் பக்த ஜய மாருதி 
நீலக்கடலை ஒரு நீர்த்தாரைபோல்
தாவிக் குதித்த வீர ஜய மாருதி 
ஜய மாருதி ஜய மாருதி  
ஜய ஜய ஜய ஜய ஜய மாருதி 

ஸீதைக்குயிர் கொடுத்த ஜய மாருதி 
அரக்கர் சேனை வென்ற ஜய மாருதி 
பொல்லாத ராவணனை லங்கேஷனைப்
புழுவாய் மதித்த வீர ஜய மாருதி 
ஜய மாருதி ஜய மாருதி  
ஜய ஜய ஜய ஜய ஜய மாருதி 

மலையைக் கொணர்ந்து வந்து ராமானுஜன்
தனக்குயிரைக் கொடுத்துப் புகழ் சேர் மாருதி
அனல் பாய நின்ற பரதன் செவி தன்னிலே
அமுதம் பெய்யும் மொழிகொள் உயிர் சேர் மாருதி
ஜய மாருதி ஜய மாருதி  
ஜய ஜய ஜய ஜய ஜய மாருதி 

PunnAgavArALi           Adi

SrI rAmA rAmA enRu jaya MAruti
sindittirukkum bhakta jaya MAruti 
nIlakkaDalai oru nIrttAraipOl
tAvik kuditta vIra jaya MAruti 
Jaya MAruti jaya MAruti  
Jaya jaya jaya jaya jaya MAruti 

SItaikkuyir koDutta jaya MAruti 
arakkar sEnai venRa jaya MAruti 
PollAda rAvaNanai lankEshanaip
PuzhuvAy maditta vIra jaya MAruti 
Jaya MAruti jaya MAruti  
Jaya jaya jaya jaya jaya MAruti 

Malaiyaik koNarndu vandu rAmAnujan
tanakkuyiraik koDuttup pugazh cEr MAruti
anal pAya ninRa Bharatan sevi tannilE
amudam peyyum mozhikoL uyir cEr MAruti
Jaya MAruti jaya MAruti  
Jaya jaya jaya jaya jaya MAruti 


பீம்ப்லாஸ்               ரூபகம்

தைலம் மணக்குது எங்கே தைலம் மணக்குது?
பத்மனாப ஸ்வாமியின் கோயிலில் மணக்குது

துளஸியும் சந்தனமும் எங்கே மணக்குது?
த்வாரகா நாதனின் ஸன்னதியில் மணக்குது (தைலம் மணக்குது)

ஏலமும் முந்திரியும் எங்கே மணக்குது?
ஏழுமலை வாஸனின் ப்ரஸாதத்தில் மணக்குது

அத்தரும் ஜவ்வாதும் எங்கே மணக்குது?
அழகிரி ரங்கனின் மேனியில் மணக்குது (தைலம் மணக்குது)

சாம்பிராணி வாஸமது எங்கே மணக்குது?
ஷார்ங்கபாணியின் ஸன்னதியில் மணக்குது

குங்குமப்பூ கற்பூரம் எங்கே மணக்குது?
குருவாயூரப்பனின் தீர்த்தத்தில் மணக்குது (தைலம் மணக்குது)

கோவிந்தனின் கோஷமது எங்கே ஒலிக்குது?
திருமலை திருப்பதி கோயிலில் ஒலிக்குது

எங்கே மணக்குது விபூதி எங்கே மணக்குது?
என்னப்பன் பழனியிலே விபூதி மணக்குது (தைலம் மணக்குது)

BImplAS          rUpakam

tailam maNakkudu engE tailam maNakkudu?
PadhmanAbha SwAmiyin kOyilil maNakkudu

tuLaSiyum candhanamum engE maNakkudu?
dhwArakA nAthanin Sannadhiyil maNakkudu (tailam maNakkudu)

Elamum mundiriyum engE maNakkudu?
Ezhumalai vASanin praSAdattil maNakkudu

attarum javvAdum engE maNakkudu?
azhagiri ranganin mEniyil maNakkudu (tailam maNakkudu)

sAmbirANi vASamadu engE maNakkudu?
ShArngapANiyin Sannadhiyil maNakkudu

KungumappU kaRpUram engE maNakkudu?
GuruvAyUrappanin tIrtattil maNakkudu (tailam maNakkudu)

GOvindanin GOshamadu engE olikkudu?
tirumalai tiruppadi kOyilil olikkudu

engE maNakkudu vibhUti engE maNakkudu?
ennappan PazhaniyilE vibhUti maNakkudu (tailam maNakkudu)


காவடி/பீம்ப்லாஸ்             சதுஷ்ர ஏகம்

முருகா………………………முருகா…………………………

தென் பழனி மலையில் வாழும் தெய்வமென் தெய்வம்
தேன் பொழியும் தமிழ்க் குமரன் தெய்வமென் தெய்வம்
வான் புகழும் வடிவேலன் தெய்வம் என் தெய்வம்
வண்ண மயிலேறி வரும் தெய்வம் என் தெய்வம்
முருகா………………………முருகா………………………… (தென்)

குன்று தோறும் விளையாடிய தெய்வம் என் தெய்வம்
குஞ்சரி குற மங்கையினைத் தான் மணந்த தெய்வம்
கன்று மேய்த்த கண்ணன் எழில் மருகன் என் தெய்வம்
கயிலை நாதன் ஈன்ற செல்வக் கண்மணி என் தெய்வம்
முருகா………………………முருகா…………………………  
முருகா…………………………………………………………… (தென்)


சூரனை வதைத்த வீர ஜ்யோதி என் தெய்வம்
சுட்ட பழம் ஔவைக்கு ஈந்த ஸுப்ரமண்ய தெய்வம்
சீரழகு சிந்தும் தூய ஷண்முகன் என் தெய்வம்
சிந்தையில் உறைந்திருக்கும் கந்தன் என் தெய்வம்

முருகா……………………………………………………………………

வணங்கிட நல் வாழ்வளிக்கும் சீலன் என் தெய்வம்
வையமெல்லாம் வாழ்த்தும் கலி வரதன் என் தெய்வம்
குணம் கொண்டு காத்திடும் குருபரன் என் தெய்வம்
போதிலாத சரவணபவ முருகன் என் தெய்வம் (தென்)

KAvaDi/dEsh            Catushra Ekam

MurugA………………………MurugA…………………………

ten Pazhani malaiyil vAzhum deyvamen deyvam
tEn pozhiyum tamizhk kumaran deyvamen deyvam
VAn pugazhum vaDivElan deyvam en deyvam
VaNNa mayilERi varum deyvam en deyvam
MurugA………………………MurugA………………………… (ten)

KunRu tORum viLaiyADiya deyvam en deyvam
Kunjari kuRa mangaiyinait tAn maNanda deyvam
KanRu mEytta KaNNan ezhil marugan en deyvam
Kayilai nAthan InRa selvak kaNmaNi en deyvam
MurugA………………………MurugA…………………………
MurugA……………………………………………………………… (ten)


sUranai vadaitta vIra jyOti en deyvam
CuTTa pazham auvaikku Inda SubramaNya deyvam
sIrazhagu cindum tUya shaNmukhan en deyvam
Cindaiyil uRaindirukkum Kandan en deyvam

MurugA……………………………………………………………………….

VaNangiDa nal vAzhvaLikkum sIlan en deyvam
VaiyamellAm vAzhttum kali varadan en deyvam
GuNam koNDu kAttiDum Guruparan en deyvam
POdilAda saravaNabhava Murugan en deyvam (ten)


तिलङ            तीन ताल         नर्सिन्ह मॅह्ता

वैष्णव जन तो तेने कहिये जे पीड पराई जाणे रे
पर दु:खे उपकार करे तोये मन अभिमान न आणे रे, (वैष्णव)
सकल लोकमां सहुने वंदे निंदा न करे केनी रे,
वाच काछ मन निश्चल राखे धन धन जननी तेनी रे, (वैष्णव)
समदृष्टि ने तृष्णा त्यागी, परस्त्री जेने मात रे,
जिह्वा थकी असत्य न बोले, परधन नव झाले हाथ रे, (वैष्णव)
मोह माया व्यापे नहि जेने, दृढ़ वैराग्य जेना मनमां रे,
रामनाम सुताली लागी, सकल तीरथ तेना तनमां रे,(वैष्णव)
वणलॊभी ने कपटरहित जे, काम क्रोध निवार्या रे,
भणे नरसैयॊ तेनु दरसन करतां, कुण एकोतेर तार्या रे ॥ (वैष्णव)

tilang     Adi     Narsinh Mehta

VaishNav jan tO tEnE kahiyE jE pID parAyI jANE rE,
Par dukkhE upkAr karE tOyE man abhimAn na ANE rE,
Sakal lOkmAm SahunE vandE nindA na karE kEnI rE,
vAc kAch man nishcal rAkhE dhan shan jananI tEnI rE,
SamdrushTi nE trushNA tyAgI, paraStrI jEnE mAt rE,
JihvA thakI aSatya na bOlE, pardhan nav jhAlE hAth rE,
rAmnAm SutAlI lAgI, Sakal tIrath tEnA tanmAm rE,
vaNlObhI nE kapaTrahit jE, kAm krOdh nivAryO rE,
bhaNE narSaiyO tEnu darSaN kartAm, kuNa EkOtEr tAryA rE|| (VaishNav)


ஸிந்துபைரவி           ஆதி

வள்ளிக் கிழங்கினைக் கெல்லி எடுத்திட்ட பள்ளத்திலே கிடந்தாள் அன்று 
வள்ளிக் கிழங்கினைக் கெல்லி எடுத்திட்ட பள்ளத்திலே கிடந்தாள் அவள்
வள்ளிமலைக் குமரேசன் மடியிலே மேவிய தேனோடே (2)

மானுக்குப் பெண்ணாகிக் காட்டுக்குறக் குல மகள் என்றே.. வளர்ந்தாள் வள்ளி (2)
தேவர் சேனைக் கதிபதி சிங்கார வேலவன் தன் தேவியென்றான் அது ஏன்? (2)
ஆலோலம் பாடியே………………………………………………………………….. 
ஆலோலம் பாடியே குருவிகள் ஓட்டியே அன்று புனம் காத்தாள் (2)
இன்று மாலோன் மருகன் மகராசியானதை மறைகள் புகன்றதுவே (2)

கூடை முறம் கட்டிக் கோணக்கொண்டை இட்டக் குறத்தி மகளுக்குத்தான் அன்று (2)
பட்டில் ஆடையும் பீடமும் ஆறுகால பூஜையும் ஆலயமும் ஆச்சே (2)

காக்கைக் குருவிகள் கவண் எறிந்தோட்டியே காத்துக்கிடந்தவளாம் அன்று (2)
இன்று காத்துக் கிடக்குமாம் நீல மயில் அவள் காலடிப் பக்கத்திலே (2)

பச்சைக் கிழங்கோடு…………………………………………………………..
பச்சைக் கிழங்கோடு தேனும் தினை மாவும் பாவையவள் தின்றாள் (2)
இன்று பஞ்சாம்ருதம் பால் குடம் தேன் குடம் பருகி வளர்கின்றாள் (2)

ஆவாரம் கொம்பிலே பரணைக் கட்டிக்கொண்டு ஆலோலம் பாடியவள் அன்று (2)
இன்று ஆறுபடை வீட்டில் ஏறி நின்று குன்றில் அரசு செலுத்துகிறாள் (2)

மானைத் துரத்தியே ………………………………………………………………..
மானைத் துரத்தியே வந்த வடிவேலன் மங்கை இவளைக் கண்டு (2)
அவன் மயங்கித் தயங்கி மறுவொளியானதேன்? மார்கமும் தோன்றவில்லை! (2)

சின்னத்தனத்துக்கோ சிங்காரப் பேச்சுக்கோ சிரித்த முகத்துக்கோ தான் வள்ளி (2)
அவன் என்னத்துக்காக மரமாகி நின்றானோ எனக்குத்தெரியவில்லை! (2)

தம்மாத்துக்காரியைப் பார்த்துக் கிடந்து தான் பண்டாரமானானோ (2)
அடி அம்மாடியோ அவள் ஆசை வலையிலே ஆண்டியாய்ப் போனானோ? (2)

கள்ளக் குறத்திக்கு ……………………………………………………………..
கள்ளக் குறத்திக்கு கந்தன் தொடர்பிலே உள்ள விஷயமென்ன? (2)
சிறு பிள்ளை முதல் அவள் உள்ளத்திலே கந்தன் பித்துப் பிடித்ததினால்! (2)

ஆனை முகத்தோனைக் காட்டிய வேலனும் வள்ளியின் கரம் பிடித்தான் (2)
அந்தத் திருத்தணி மலையிலே கல்யாண முருகனைப் பார்த்து மகிழ்ந்திடுவோம் (2)
நாம் பார்த்து மகிழ்ந்திடுவோம் (2)

Sindubhairavi           Adi

VaLLik kizhanginaik kelli eDuttiTTa PaLLattilE kiDandAL – anRu 
VaLLik kizhanginaik kelli eDuttiTTa PaLLattilE kiDandAL – avaL
VaLLimalaik KumarEsan maDiyilE mEviya tEnODE (2)

MAnukkup peNNAgik kATTukkuRak kula magaL enRE.. vaLarndAL – vaLLi (2)
dEvar sEnaik kadipati singAra vElavan tan dEviyenRAn adu En? (2)
AlOlam pADiyE………………………………………………………………….. 
AlOlam pADiyE kuruvigaL OTTiyE anRu punam kAttAL (2)
inRu mAlOn marugan magarAsiyAnadai maRaigaL puganRaduvE (2)

KUDai muRam kaTTik kONakkoNDai iTTak kuRatti magaLukkuttAn – anRu (2)
PaTTil ADaiyum PITamum ARukAla pUjaiyum Alayamum AccE (2)

KAkkaik kuruvigaL kavaN eRindOTTiyE kAttukkiDandavaLAm – anRu (2)
inRu kAttuk kiDakkumAm nIla mayil avaL kAlaDip pakkattilE (2)

Paccaik kizhangODu…………………………………………………………..
Paccaik kizhangODu tEnum tinai mAvum pAvaiyavaL tinRAL (2)
inRu pancAmrutam pAl kuDam tEn kuDam parugi vaLarginRAL (2)

AvAram kombilE paraNaik kaTTikkoNDu AlOlam pADiyavaL – anRu (2)
inRu ARupaDai vITTil ERi ninRu kunRil aracu celuttugiRAL (2)

MAnait turattiyE ………………………………………………………………..
MAnait turattiyE vanda vaDivElan mangai ivaLaik kaNDu (2)
avan mayangit tayangi maRuvoLiyAnadEn mArgamum tOnRavillai (2)

CinnattanattukkO singArap pEccukkO siritta mukhattukkO tAn – vaLLi (2)
avan ennattukkAga maramAgi ninRAnO enakkutteriyavillai (2)

tammAttukkAriyaip pArttuk kiDandu tAn paNDAramAnAnO (2)
aDi ammADiyO avaL Asai valaiyilE ANDiyAyp pOnAnO? (2)

KaLLak kuRattikku ……………………………………………………………..
KaLLak kuRattikku Kandan toDarbilE uLLa vishayamenna? (2)
CiRu piLLai mudal avaL uLLattilE Kandan pittup piDittadinAl (2)

Anai mukhattOnaik kATTiya vElanum vaLLiyin karam piDittAn (2)
andat tiruttaNi malaiyilE kalyANa Muruganaip pArttu magizhndiDuvOm (2)
nAm pArttu magizhndiDuvOm (2)


பெஹாக்               ஆதி 

வாணி வேணி ப்ரம்ம புராணி வந்தருள் கல்யாணி  
வாணி உனது பாதம் போற்றி பார் மகிழ் தூப தீபமேற்றி
பணிந்தோம் எங்களை ஆண்டருள்வாய்
பாரதி ஸ்ரீரதி பங்கஜ மாமணி (வாணி)

ஸரஸ்வதி ஸபை சிங்காரி ஷாரதா ஸங்கீத வாணி
ஸகல தேவர் போற்றும் தயாநிதி
பாரதி ஸ்ரீரதி பங்கஜ மாமணி (வாணி)

BehAg               Adi 

VANi vENi Bramma purANi vandaruL kalyANi  
VANi unadu pAdam pORRi pAr magiz dUpa dIpamERRi
paNindOm engaLai ANDaruLvAy
BhArati srIrati pankaja mAmaNi (VANi)


SaraSwati Sabhai singAri ShAradA SangIta vANi
Sakala dEvar pORRum dayAnidi
BhArati srIrati pankaja mAmaNi (VANi)


மாண்ட்            ஆதி

வேல் முருகா மால் மருகா வா வா ஷண்முகா
கால் பிடித்தேன் காத்தருள வா வா ஷண்முகா

நாலு வேதப்பொருளோனே நாதா ஷண்முகா
நல்லதெல்லாம் உன்பால் கொண்டாய் நாதா ஷண்முகா
செல்லமாகச் சிவன் அணைக்கும் சேயே ஷண்முகா
செங்கதிர்வேல் தாங்கிய என் தேவா ஷண்முகா (கால்)

ஆறுபடை வீடுடைய ஆண்டவா ஷண்முகா
ஆனந்தமே அற்புதமே ஆண்டவா ஷண்முகா
தேறுதலைத் தருபவனே தேவா ஷண்முகா
சிங்கார ஓங்கார சீலனே ஷண்முகா
நாறு மாலை அணிமார்பா நாயகா ஷண்முகா
நாத பிந்து கலா தீத நாயகா ஷண்முகா (கால்)

ஏறு மயில் வாஹனனே ஏந்தலே ஷண்முகா
நீறணிந்தோர் வினை போக்கும் நீதனே ஷண்முகா
பாடும் பணி தந்திடுவாய் பண்டிதா ஷண்முகா
பக்தருடன் கூட்டிடுவாய் முத்தனே ஷண்முகா
ஆடும் சேவற்கொடி அழகா ஆண்டவா ஷண்முகா
அடியார் உள்ளக் குஹையமர்ந்த ஆனந்தா ஷண்முகா (கால்)

வீடும் நாடும் நின் திருத்தாள் என் முன் வா ஷண்முகா
வீரன் சூரன் உடலொழித்த வீரனே ஷண்முகா
ஓடும் மனம் உன்னை நாட ஆடிவா ஷண்முகா
ஒருவனே என் வினை அழித்த உத்தமா ஷண்முகா
எல்லையிலா ஆனந்தனே ஏகாந்தா ஷண்முகா
எங்கும் நிறை அன்புருவே என் முருகா ஷண்முகா (கால்)

தில்லையிலே ஆடும் தேவி பாலகா ஷண்முகா
திருட்டுத்தனமாய்க் குறக்கொடியைக் கொண்டவா ஷண்முகா
தொல்லையெல்லாம் கடந்த பதம் தந்திடு ஷண்முகா
தோத்தரித்தோம் எங்கள் முன்னே வந்திடு ஷண்முகா
கல்லை ஒத்த மனமுருகக் கருணை செய் ஷண்முகா
கல் எனச்சிலம்பொலிக்க ஓடி வா ஷண்முகா (கால்)

MAND         Adi

VEl murugA mAl marugA vA vA ShaNmukhA
KAl piDittEn kAttaruLa vA vA ShaNmukhA

nAlu vEdapporuLOnE nAthA ShaNmukhA
nalladellAm unpAl koNDAy nAthA ShaNmukhA
CellamAgac civan aNaikkum cEyE ShaNmukhA
senkadirvEl tAngiya en dEvA ShaNmukhA (KAl)

ARupaDai vIDuDaiya ANDavA ShaNmukhA
AnandamE aRpudamE ANDavA ShaNmukhA
tERudalait tarubavanE dEvA ShaNmukhA
singAra OnkAra sIlanE ShaNmukhA
nARu mAlai aNimArbA nAyakA ShaNmukhA
nAda bindu kalA dIta nAyakA ShaNmukhA (KAl)

ERu mayil vAhananE EndalE ShaNmukhA
nIRaNindOr vinai pOkkum nIdanE ShaNmukhA
PADum paNi tandiDuvAy paNDitA ShaNmukhA
BhaktaruDan kUTTiDuvAy muttanE ShaNmukhA
ADum sEvaRkoDi azhagA ANDavA ShaNmukhA
aDiyAr uLLak guhaiyamarnda AnandA ShaNmukhA (KAl)

VIDum nADum nin tiruttAL en mun vA ShaNmukhA
VIran sUran uDalozhitta vIranE ShaNmukhA
ODum manam unnai nADa ADivA ShaNmukhA
oruvanE en vinai azhitta uttamA ShaNmukhA
ellaiyilA AnandanE EkAntA ShaNmukhA
engum niRai anburuvE en murugA ShaNmukhA (KAl)

tillaiyilE ADum dEvi bAlakA ShaNmukhA
tiruTTuttanamAyk kuRakkoDiyaik koNDavA ShaNmukhA
tollaiyellAm kaDanda padam tandiDu ShaNmukhA
tOttarittOm engaL munnE vandiDu ShaNmukhA
Kallai otta manamurugak karuNai sey ShaNmukhA
Gal enaccilambolikka ODi vA ShaNmukhA (KAl)


சிவரஞ்சனி/ஜௌன்புரி                  ஆதி                   

விண் கொண்ட தேவர்கள் போற்றிப்பணிந்திடும்
மெய்ப்பொருளே கலியுக வரதா....
பண் கொண்ட செந்தமிழ்த் தோத்திரம் பாடியே
பணிந்தனம் ஆண்டருள்வாய் ஸதா

இருமுடி தாங்கியே மாமலை ஏறி வந்-
தீச்வரனே உந்தன் காட்சி கண்டோர்
கரும வினை, அகன்றே நலம், எய்திட
காண்பதென்றோத ஸந்தேஹமுண்டோ? (விண் கொண்ட)

ஐயப்பா உன் போல் தெய்வம் அவனியில் இல்லையப்பா
அதிசய பிறவியப்பா அருள் தரும் பிள்ளையப்பா
அமரர்களும் புலியாய் ஆனார் உனக்கப்பா
அரிஹரன் உமக்கம்மை அப்பனும் அப்பா (விண் கொண்ட)

ஷரணம் ஐயப்பா ஐயப்பா ஷரணம் என்று
ஓதும் உனைச்சார்ந்தோர் தரணியில் உயர்ந்தோர்
காசினி துயரப்பா கடிதனில் நீக்கப்பா
கலியுக மெய்யப்பா துய்யனே மெய்யப்பா (விண் கொண்ட)

Sivaranjani/Jaunpuri      Adi     

ViN koNDa dEvargaL pORRippaNindiDum
MeypporuLE kaliyuga varadA....
PaN koNDa sentamizht tOttiram pADiyE
PaNindanam ANDaruLvAy SadA (ViN koNDa)

irumuDi tA#ngiyE mAmalai ERi van2-
dIcvaranE undan kATsi kaNDOr
Karuma vinai, aganRE nalam, eydiDa
KANbadenROda SandEhamuNDO (ViN koNDa)

aiyappA un pOl deyvam avaniyil illaiyappA
adisaya piRaviyappA aruL tarum piLLaiyappA
amarargaLum puliyAy AnAr unakkappA
ariharan umakkammai appanum appA (ViN koNDa)

SharaNam aiyappA aiyappA SharaNam enRu
Odum unaiccArndOr taraNiyil uyarndOr
KAsini tuyarappA kaDidanil nIkkappA
Kaliyuga meyyappA tuyyanE meyyappA (ViN koNDa)


மாயாமளவகௌளை               ஆதி

பல்லவி

கிலு கிலு கிலு கிலு கிலு கிலுவென சப்தம் கேட்குது - சப்தம் கேட்குது
க்ருஷ்ணன் சாயக்கொண்டை தான் அசையத் தவழ்ந்து வருகையில் (2)

. பல்லவி

மினு மினு மினு மினு மினு மினுவென மோதிரம் மின்னுதே - மோதிரம் மின்னுதே
க்ருஷ்ணன் முகம் தனிலே திலகப்பொட்டு மினுமினுக்கையிலே (2)

சரணம்

ஊரையெல்லாம் சுற்றி சுற்றி ஓட்டம் பிடிக்கவே - க்ருஷ்ணன் ஓட்டம் பிடிக்கவே
யசோதா உள்ளே வந்து உரலில் கட்ட யோசனை செய்யவே
வரிந்து வரிந்து கட்டக் கயிறு குறைந்து போகுதே - கயிறு குறைந்து போகுதே
அதில் இரண்டு நள பூபர்கள் சாபம் தீரவே (கிலு)

MAyAmALavagauLai                Adi
 
Pallavi

Kilu kilu kilu kilu kilu kiluvena shabdam kETkudu - shabdam kETkudu
KrushNan sAyakkoNDai tAn asaiyat tavazhndu varugaiyil (2)
 
a. pallavi

Minu minu minu minu minu minuvena mOdiram minnudE - mOdiram minnudE
KrushNan mugam tanilE tilakappoTTu minuminukkaiyilE (2)
 
CaraNam

UraiyellAm suTRi suTRi OTTam piDikkavE - KrushNan OTTam piDikkavE
YashOdA uLLE vandu uralil kaTTa yOsanai seyyavE
varindu varindu kaTTak kayiRu kuRaindu pOgudE - kayiRu kuRaindu pOgudE
adil iraNDu naLa bUpargaL shApam tIravE (kilu)


காவடிச் சிந்து              ஆதி            C பாலக்ருஷ்ணன் பாடியது 

கவலை மறந்திடு கையெடுத்துக்கும்பிடு கருணையைப்பொழிவான் அய்யப்பன்
இருமுடி சுமந்திடு திருவடி அடைந்திடு ஆனந்தம் தருவான் அய்யப்பன் (கவலை)

மனதினில் அவனை இருத்திடு அதில் மெய்யோடு பூஜை நடத்திடு (மனதினில்)
வரணம் வரணம் வரம் தரணும் தரணும் தினம்
சரணம் சரணம் சொல்லி அழைத்திடு (2) (கவலை)

அகந்தையும் சினத்தையும் அழித்திடு என்றும் அன்போடு அவனைத் துதித்திடு (2)
வரணம் வரணம் வரம் தரணும் தரணும் தினம்
சரணம் சரணம் சொல்லி அழைத்திடு (2) (கவலை)

அன்னதானத்தை செய்திடு அதில் அவன் அருளை நீ பெற்றிடு (2)
வரணம் வரணம் வரம் தரணும் தரணும் தினம்
சரணம் சரணம் சொல்லி அழைத்திடு (2) (கவலை)

அய்யப்பா ……………………….. அய்யப்பா ……………………
அய்யப்பா ஷரணம் அய்யப்பா (3)

kAvaDic cindu              Adi          

kavalai maRandiDu kaiyeDuttukkumbiDu karuNaiyaippozhivAn ayyappan
irumuDi sumandiDu tiruvaDi aDaindiDu Anandam taruvAn ayyappan (kavalai)

manadinil avanai iruttiDu adil meyyODu pUjai naDattiDu (manadinil)
varaNam varaNam varam taraNum taraNum dinam
caraNam caraNam colli azhaittiDu (2) (kavalai)

agandaiyum cinattaiyum azhittiDu enRum anbODu avanait tudittiDu (2)
varaNam varaNam varam taraNum taraNum dinam
caraNam caraNam colli azhaittiDu (2) (kavalai)

annadAnattai seydiDu adil avan aruLai nI peRRiDu (2)
varaNam varaNam varam taraNum taraNum dinam
caraNam caraNam colli azhaittiDu (2) (kavalai)
ayyappA …………A…………A….. ayyappA …………A…………A
ayyappA sharaNam ayyappA (3)

ஸிந்துபைரவி              ஆதி           

பம்பா நதிக்கரையின் பாலகனாம் அம்மையப்பன் சிவ நாரணனாம்
கந்தனுக்கும் கணபதிக்கும் இளையவனாம் அவனே
ஸ்வாமி ஷரணம் என்னும் அய்யப்பனாம் (அவனே) (ஸ்வாமி)

ஷபரிமலை மீது அமர்ந்தவனாம்
ஸன்னதிக்கு வருவோரைக் காப்பவனாம் (ஷபரி)
உளமார நினைப்போர்க்கு அருள்பவனாம் அவனே (2)
ஸ்வாமி ஷரணம் என்னும் அய்யப்பனாம் (அவனே) (ஸ்வாமி)

வ்ரதத்தின் தத்துவத்தை சொன்னவனாம் அவன்
வேண்டும் அடியாரின் உள்ளம் உணர்ந்தவனாம் (வ்ரதத்தின்)
கோடானுகோடி பக்தர் கொண்டவனாம் (2) அவனே
ஸ்வாமி ஷரணம் என்னும் அய்யப்பனாம் (அவனே) (பம்பா) (ஸ்வாமி)

Sindhubhairavi      Adi        Sung by: C Balakrushnan

PampA nadikkaraiyin bAlakanAm ammaiyappan siva nAraNanAm
Kandanukkum gaNapatikkum mUttavanAm avanE
SwAmi sharaNam ennum ayyappanAm (avanE) (SwAmi)

Shabarimalai mIdu amarndavanAm 
Sannadikku varuvOraik kAppavanAm (Shabari)
uLamAra ninaippOrkku aruLbavanAm avanE (2)
SwAmi sharaNam ennum ayyappanAm (avanE) (SwAmi)

Vratattin tattuvattai sonnavanAm avan
VENDum aDiyArin uLLam uNarndavanAm (Vratattin)
KODAnukOTi bhaktar koNDavanAm (2) avanE
SwAmi sharaNam ennum ayyappanAm (avanE) (PampA) (SwAmi)

ஹம்ஸத்வனி           ஆதி              


ஸ்வாமி சரணம் சொல்லுங்கள்
அய்யப்ப சரணம் சொல்லுங்கள் (2)
ஸ்வாமியே …………………ஷரணம் அய்யப்போவ் (2)

அ ப

ஜாதியுமில்லை பேதமுமில்லை யாரும் சொல்லலாம்
இளமையும் இல்லை முதுமையும் இல்லை யாரும் செல்லலாம் (ஜாதி)
அய்யப்ப சரணம் சொன்னாலே வந்திடும் நன்மை தன்னாலே (2) (ஸ்வாமியே)


பட்டும் வேண்டாம் பகட்டும் வேண்டாம் காவி ஒன்றே போதும்
ஏழையானாலும் செல்வந்தரானுலும் சாமி ஒன்றே போதும் (பட்டும்)
நேர்மையாய் வ்ரதம் கொள்வோமே சபரிமலைக்கே செல்வோமே (2) (ஸ்வாமியே)

தங்கமணிமாலை வைரமணி மாலை அணிந்திடத் தேவை இல்லை (2)
எளிமையான துளசி மாலைக்கு ஈடிங்கு எதுவுமில்லை (2)
மணிகண்ட நாமம் சொன்னாலே மங்களம் வந்திடும் தன்னாலே (2) (ஸ்வாமியே)

HamSadwani      Adi       

Pa

SwAmi caraNam collungaL
ayyappa caraNam collungaL (2)
SwAmiyE ………………….sharaNam ayyappOv (2)

a pa

JAtiyumillai bEdamumillai yArum sollalAm
iLamaiyum illai mudumaiyum illai yArum sellalAm (JAti)
ayyappa caraNam connAlE vandiDum nanmai tannAlE (2) (SwAmiyE)

ca

PaTTum vENDAm pagaTTum vENDAm kAvi onRE pOdum
EzhaiyAnAlum selvandarAnulum sAmi onRE pOdum (paTTum)
nErmaiyAy vratam koLvOmE shabarimalaikkE selvOmE (2) (SwAmiyE)

tangamaNimAlai vairamaNi mAlai aNindiDat tEvai illai (2)
eLimaiyAna tuLasi mAlaikku IDingu eduvumillai (2)
maNikaNDa nAmam sonnAlE mangaLam vandiDum tannAlE (2) (SwAmiyE)