Wednesday, September 5, 2018

Bhajans (பஜனைப் பாடல்கள்) 02

In this upload the following bhajans are given. You can visit YouTube "Bhajans 02   (Srinivasan)" for the audio.

இந்தப் பகுதியில் கீழ்க்கண்ட பஜனைப் பாடல்கள் இடம் பெறுகின்றன. இவற்றின் ஒலி வடிவத்தை யூ ட்யூபின் "Bhajans 02  (Srinivasan)" ல் காணலாம்.


YouTube Link (யூ ட்யூபின் இணைப்பு): https://www.youtube.com/watch?v=iKn7hfKvSxc&feature=youtu.be  



மோஹனம்          ஆதி

என்னப்பனே என் ஐயனே கந்தப்பனே கந்த காருண்யனே (என்)

பன்னிருகை வேலவனே (2) கன்னி வள்ளி மணவாளனே
வேல் வேல் வேல் வேல் வேல்முருகா வேல், வேல்முருகா மாப்பழனி
வேல்முருகா  வேல் வேல்

பார்வதியாள் பாலகனே (2)  பக்தர்களுக்கு அனுகூலனே
வேல் வேல் வேல் வேல் வேல்முருகா வேல், வேல்முருகா மாப்பழனி
வேல்முருகா  வேல் வேல்

எட்டுக்குடி வேலவனே (2) சுட்ட பழம் தந்தவனே
அவ்வைக்குச் சுட்ட பழம் தந்தவனே
வேல் வேல் வேல் வேல் வேல்முருகா வேல், வேல்முருகா மாப்பழனி
வேல்முருகா  வேல் வேல்

கால்களில் பொற்சிலம்பு முருகன் கைகளில் பொற்சரங்கள் (2)
கல் கல் கல் என வருவான்
வேல் வேல் வேல் வேல் வேல்முருகா வேல், வேல்முருகா மாப்பழனி
வேல்முருகா  வேல் வேல்

MOhanam          Adi

ennappanE en aiyanE kandappanE kanda kAruNyanE (en)

pannirukai vElavanE (2) kanni vaLLi maNavALanE
vEl vEl vEl vEl vElmurugA vEl, vElmurugA mAppazhani
vElmurugA  vEl vEl

pArvatiyAL bAlakanE (2)  bhaktargaLukku anukUlanE
vEl vEl vEl vEl vElmurugA vEl, vElmurugA mAppazhani
vElmurugA  vEl vEl

eTTukkuDi vElavanE (2) cuTTa pazham tandavanE
avvaikkuc cuTTa pazham tandavanE
vEl vEl vEl vEl vElmurugA vEl, vElmurugA mAppazhani
vElmurugA  vEl vEl

kAlgaLil poRcilambu murugan kaigaLil poRcarangaL (2)
gal gal gal ena varuvAn
vEl vEl vEl vEl vElmurugA vEl, vElmurugA mAppazhani
vElmurugA  vEl vEl


தர்பாரி கானடா            ஆதி          மீரா பஜன்

हरि तुं हरो जन कि पीर
द्रौपदीकि लाज राखि तुं बढयो चीर
भकत कारन रूप नरहरि धर्यो आप शरीर
हिरण्य कष्यप मार लीन्हो धर्यो नादिन धीर
बूढते गज राज राख्यो कियो बाहर नीर
दासि मीरा लाल गिरधर दुख जहान तहान पीर

Hari tum harO jan ki pIr
draupadIki lAj rAkhi tum baDhayO cIr
bhakat kAran rUp narahari dharyO Ap sharIr
HiraNya kashyapa mAr lInhO dharyO nAdin dhIr
bUDhatE gaja rAja rAkhyO kiyO bAhar nIr
dAsi mIrA lAl giradhar dukh jahAn tahAn pIr 


பீம்ப்லாஸ்                        ஆதி

ஹரோஹரா ஆறுமுகா ஆதி கேசன் மருமகா 
ஆதரித்தாளும் உயர் வேதம் ஓதும் வித்தகா (ஹரோ)

குன்று தோறாடி வரும் குமரனே நீ வா வா
குறைகளைத் தீர்த்திடுவாய் கொற்றவனே வா வா
குவலயத்தோர் போற்றும் கோமகனே வா வா
குரு பரனே சிவ குரு பரனே வா வா (ஹரோ)

நீல மயிலேறும் நேசனே நீ வா வா
நீதியைப்புகட்டிடும் நல் நெஞ்சகனே வா வா
நேர்மையை நிலை நாட்டும் நீதிமானே வா வா
நேசிக்கும் நெஞ்சகத்தில் இருப்பவனே வா வா (ஹரோ)

பாரோர் போற்றிப்பாடும் பரமனே நீ வா வா
பக்தர்கள் நாவினிலே பதிந்தவனே வா வா
படித்தவர் பாமரர் பலர் பஜித்திடுறார் வா வா
பதம் தனைப் பணிந்திடும் எமைக் காத்திடவே வா வா (ஹரோ)

BImplAS                        Adi

HarOharA ARumukhA Adi kEsan marumagA 
AdarittALum uyar vEdam Odum vittagA (HarO)

KunRu tORADi varum kumaranE nI vA vA
kuRaigaLait tIrttiDuvAy koRRavanE vA vA
kuvalayattOr pORRum kOmaganE vA vA
Guru paranE siva Guru paranE vA vA (HarO)


nIla mayilERum nEsanE nI vA vA
nIdiyaippugaTTiDum nal nenjaganE vA vA
nErmaiyai nilai nATTum nIdimAnE vA vA
nEsikkum nenjagattil iruppavanE vA vA (HarO)

PArOr pORRippADum paramanE nI vA vA
bhaktargaL nAvinilE padindavanE vA vA
paDittavar pAmarar palar bajittiDuRAr vA vA
padam tanaip paNindiDum emaik kAttiDavE vA vA (HarO)


ஆரபி        ஆதி      

ஈசனைப்பணிவோம் நாம் இடை விடாமல் பக்தியுடன்
அன்பர் நாமெல்லோரும் கூடி இன்ப வடிவான ஈசன்
பொன்னடிகளைப்போற்றிப்பாடி துதித்திடுவோம்
புகழ்ந்திடுவோம் (ஈசனை)

கந்தா குஹா சரவணபவ கார்த்திகேயா என  ஷண்முகனை  
சிந்தா குலம் தீர்க்கும்  ஸுந்தரன் மந்திர வர்ணனைப் பாடிடுவோம் (ஈசனை)

Arabhi        Adi      

IsanaippaNivOm nAm iDai viDAmal bhaktiyuDan
anbar nAmellOrum kUDi inba vaDivAna Isan
ponnaDigaLaippORRippADi tudittiDuvOm
pugazndiDuvOm (Isanai)

kandA guhA saravaNabhava kArtikEyA ena
shaNmukhanai cintAkulam tIrkkum
Sundaran mandira varNanaippADiDuvOm (Isanai)


ஹிந்துஸ்தான் காபி      ஆதி

பல்லவி

கந்தனென்ற பெயரனிடம் காதல் கொண்டேன் தோழி
காரண உலகுக்கெல்லாம் கதிர் காமன் தோழி தோழி
கதிர்வேலன் தோழி (கந்தன்)

அனு பல்லவி

எந்தனுள்ளம் கொள்ளை கொண்ட கள்வனடி தோழி
எல்லாவற்றிலும் நின்ற கர்த்தனடி தோழி
எங்கும் நிறைந்த எங்கள் காந்தனடி தோழி (கந்தன்)

சரணங்கள்

தானென்றகந்தை கொண்டால் தாளானடி தோழி
தக்ஷணமே அதை அழித்து ரக்ஷிப்பான்டி தோழி
தன்னந்தனியானவற்குத் துணையாவான் தோழி
தனை அறவே மறந்தாரையும் தான் மறவான் தோழி (கந்தன்)

நல்லதெல்லாம் தன்னிடத்தே கொண்டவன்டி தோழி
நானற்ற உள்ளமதில் கோவில் கொண்டவன்டி தோழி
தேனொத்த பண்ணிசையில் தேர்ந்தவன்டி தோழி
திக்கி திக்கி அன்பர் பாடினாலும் த்ருப்தி கொள்வான் தோழி (கந்தன்)

தேவாதி தேவர் தொழும் தெய்வமடி தோழி
தேவானை தழுவுமெந்தன் தெய்வமடி தோழி
பன்னிரு கை கொண்டன்பர் பயமொழிப்பான் தோழி
கல்லெனச் சிலம்பொலிக்க வருவானடி தோழி (கந்தன்)

கல் நெஞ்சை உருக்கும் அவன் வேலினொளி தோழி
அன்பருளம் குளிர ஆடும்  மயிலோனடி தோழி
அகண்ட மார்பில் கடம்பு கண்டால் ஆசை வளரும் தோழி
இன்பம் வரக் கூவுமவன் சேவற்கொடி தோழி (கந்தன்)

ஆறுமுகப் புன் சிரிப்பைக் கண்டு விட்டால் தோழி
அதுவே ஸத்ய இன்பமடி தோழி
என்னவென்று சொல்வேனடி என் முருகன் பெருமையினை
இன்பமாகப் பாடியாடி களித்திடுவோம் தோழி (கந்தன்)

உருகி முருகா என்றவர் முன் ஓடி வருவான் தோழி
வருக வருக என்றவனை வாழ்த்திடுவோம் தோழி
புகன்ற சொல்லில் வேதமணம் வீசுமடி தோழி
ஆதி பராசக்தி பாலன் அன்பர்க்கனுகூலன்
அழகன் கதிர்க்காமன் அவனை அணைத்தின்பமுற ஓடி வாடி தோழி (கந்தன்)

HindustAn KApi      Adi

Pallavi

KandanenRa peyaraniDam kAdal koNDEn tOzhi
KAraNa ulagukkellAm kadir kAman tOzhi tOzhi
KadirvElan tOzhi (Kandan)

anu pallavi

endanuLLam koLLai koNDa kaLvanaDi tOzhi
ellAvaRRilum ninRa karttanaDi tOzhi  
engum niRainda engaL kAntanaDi tOzhi (Kandan)

CaraNangaL
tAnenRagandai koNDAl tALAnaDi tOzhi
takshaNamE adai azhittu rakshippAnDi tOzhi
tannantaniyAnavaRkut tuNaiyAvAn tOzhi
tanai aRavE maRandAraiyum tAn maRavAn tOzhi (Kandan)

nalladellAm tanniDattE koNDavanDi tOzhi
nAnaRRa uLLamadil kOvil koNDavanDi tOzhi
tEnotta paNNisaiyil tErndavanDi tOzhi
tikki tikki anbar pADinAlum trupti koLvAn tOzhi (Kandan)

dEvAdi dEvar tozhum deyvamaDi tOzhi
dEvAnai tazhuvumendan deyvamaDi tOzhi
Panniru kai koNDanbar bhayamozhippAn tOzhi
Gallenac cilambolikka varuvAnaDi tOzhi (Kandan)

Kal nenjai urukkum avan vElinoLi tOzhi
anbaruLam kuLira ADum  mayilOnaDi tOzhi
akhaNDa mArbil kaDambu kaNDAl Asai vaLarum tOzhi
inbam varak kUvumavan sEvaRkoDi tOzhi (Kandan)

ARumukhap pun cirippaik kaNDu viTTAl tOzhi
A A aduvE Satya inbamaDi tOzhi
ennavenRu solvEnaDi en Murugan perumaiyinai
inbamAgap pADiyADi kaLittiDuvOm tOzhi (Kandan)

urugi MurugA enRavar mun – ODi varuvAn tOzhi
varuga varuga enRavanai vAzhttiDuvOm tOzhi
PuganRa collil vEdamaNam vIsumaDi tOzhi
Adi ParAsakthi bAlan anbarkanukUlan
azhagan KadirkAman avanai aNaittinbamuRa ODi VADi tOzhi (Kandan)


பைரவி           ஆதி          (ஸ்ரீ ராம ஜய ராம ஜய் ஜய ராமா ஓம் மெட்டு) (கும்மி)

கண்ணன் அழகினைப் பாருங்கடி அவன்
கமலத் திருத்தாளைப் பாருங்கடி
அண்ணல் இவன் புகழ் கேளுங்கடி இது
அன்பர்க்குரிய அமுதமடி (கண்ணன்)

புன்சிரிப்பழகைப் பாருங்கடி இது
புவனங்கட்கு அமுதமாகுமடி
கன்னி ராதை புகழ் நாதனடி கண்ணன்
காதலைப் பெற்றிட வாருங்கடி (கண்ணன்)

மேகவர்ணம் கொண்ட மேனியன்டி இவன்
மேன்மையெல்லாம் தரும் மெய்யனடி
யோகங்களுக்கெட்டா யோகியடி கண்ணன்
சாகா வரம் தரும் ஐயனடி (கண்ணன்)

ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி கண்ணனின்
ஓங்காரத் தத்துவம் கேளுங்கடி
ஓம் சக்தி ஆதியாய் நின்ற பரப்ரம்மம்
ஓம் சக்தி கண்ணனைப் பாடிடுவோம் (கண்ணன்)

Bhairavi           Adi          (SrI rAma jaya rAma jay jaya rAmA Om tune) (Kummi)

KaNNan azhaginaip pArungaDi avan
Kamalat tiruttALaip pArungaDi
aNNal ivan pugazh kELungaDi idu
anbarkkuriya amudamaDi (KaNNan)

Pun cirippazhagaip pArungaDi idu
BhuvanangaTku amudamAgumaDi
Kanni rAdhai pugazh nAthanaDi KaNNan
KAdalaip peRRiDa vArungaDi (KaNNan)

MEgavarNam koNDa mEniyanDi ivan
mEnmaiyellAm tarum meyyanaDi
YOgangaLukkeTTA yOgiyaDi KaNNan
sAgA varam tarum aiyanaDi (KaNNan)

Om sakti Om sakti Om sakti KaNNanin
OnkArat tattuvam kELungaDi
Om sakti AdiyAy ninRa parabrammam
Om sakti KaNNanaip pADiDuvOm (KaNNan)


ஸிந்துபைரவி           ஆதி

பல்லவி

கருணைக்கடலே ஏழைப் பங்காளா கார்த்திகேயனே
கந்தா கந்தா, கந்தா எனக்குகந்த வரம் தா முருகா (கருணை)

அனு பல்லவி

கருக்குழியாம் நரகமதில் இனிப் புகமாட்டேன்
இனிப் புகமாட்டேன் அதில் இனிப் புகமாட்டேன்
கந்தா கந்தா, கந்தா எனக்குகந்த வரம் தா முருகா (கருணை)

சரணங்கள்

முருகா முருகா என்ற முறை கேட்கவில்லையோ?
உருகாதோ உந்தன் உள்ளமதில் தயை இல்லையோ?
பெரும் காதலுடன் உன் திருத்தாள் வேண்டினேனையா 
வேண்டினேனையா  திருத்தாள் வேண்டினேனையா 
கந்தா கந்தா, கந்தா எனக்குகந்த வரம் தா முருகா (கருணை)

வையகமெல்லாம் நீ காட்டும் திருவிளையாட்டு
செய்தவையும் செய்பவனும் செய்கையும் நீ தான்
இந்த சேய் என் மேல் வர்மம் வைத்தால் நான் என் செய்வேனையா?
என் செய்வேனையா? என் செய்வேனையா?
கந்தா கந்தா, கந்தா எனக்குகந்த வரம் தா முருகா (கருணை)

Sindubhairavi           Adi

Pallavi

KaruNaikkaDalE Ezhaip pangALA KArttikEyanE
KandA KandA, KandA enakkuganda varam tA MurugA (KaruNai)

anu pallavi

KarukkuzhiyAm narakamadhil inip pugamATTEn
inip pugamATTEn adil inip pugamATTEn
KandA KandA, KandA enakkuganda varam tA MurugA (KaruNai)

CaraNangaL

MurugA MurugA enRa muRai kETkavillaiyO?
urugAdO undan uLLamadil dayai illaiyO?
Perum kAdaluDan un tiruttAL vENDinEnaiyA 
vENDinEnaiyA  tiruttAL vENDinEnaiyA 
KandA KandA, KandA enakkuganda varam tA MurugA (KaruNai)

vaiyagamellAm nI kATTum tiruviLaiyATTu
seydavaiyum seybavanum seygaiyum nI tAn
inda sEy en mEl varmam vaittAl nAn en seyvEnaiyA?
en seyvEnaiyA? en seyvEnaiyA?
KandA KandA, KandA enakkuganda varam tA MurugA (KaruNai)


கர்ண ரஞ்சனி           ஆதி                ஸ்வாமி ப்ரம்மாநந்த்

காயாகா பிஞ்சரா டோலே ரே இக் ஷ்வாஸ் கா பஞ்சி போலே (காயாகா)

தனு நகரி ஹை மன் மந்திர் பர்மாத்மா ஜிஸ் கே அந்தர்
தோ நயனன் பாக் ஸமுந்தர்   பாபி பாப் கோ தோலேரே (இக் ஷ்வாஸ்) (காயாகா)

மா பாப் பதி பத்னீ கா கோயி பீ நஹி ஹை கிஸீ கா
யே ஜக்டா ஹை ஜீனே கா அப் ஜாக் ஜகத் மே ஸோலேரே (இக் ஷ்வாஸ்) (காயாகா)

ஆனேகே லியே ஸப் ஜானா ஜானேகேலியே ஹை ஆனா
யே துனியா ஹை முஸாஃபிர் கானா அப் ஜானே கோ க்யோ பச்தானாரே (இக் ஷ்வாஸ்) (காயாகா)

KarNaranjani     Adi       Swami Brammanand  

kAyAkA pinjarA DOlE rE ik swAS kA panci bOlE (kAyAkA)

tanu nagari hai man mandir parmAtmA jiS kE andar
dO nayanan pAk Samundar E  pApi pAp kO dhOlErE (ik swAS) (kAyAkA)

mA bAp pati patnI kA kOyi bhI nahi hai kiSI kA
yE jagDA hai jInE kA ab jAg jagat mE SOlErE (ik swAS) (kAyAkA)

AnEkE liyE sab jAnA jAnEkEliyE hai AnA
yE duniyA hai muSAphir khAnA ab jAnE kO kyO pactAnArE (ik swAS) (kAyAkA)


யமுனா கல்யாணி               ஆதி          M S ஸுப்புலக்ஷ்மி (மீராவில் பாடியது)

मैं हरि चरणन की दासी (मैं हरि)                                                                 
मलिन विषय रस त्यागे जगके
रामनाम रस प्यासी
जनम जनम की दासी (मैं हरि)

दुख अपमान कष्ट सब सहिया
कुठिल जगत की हासी
मीरा कहे प्रभू गिरिधर नागर
काटो जगत की फांसी (जनम)  (मैं हरि)

आओ प्रीतम सुन्दर निरूपम (2)                          
अंतर होत उदासी
मानत नहीं मन धीरज मोहन
तडपत नितदिनरासी (मानत)
सांवरिया मोहनीया नागरिया मेरो पिया
प्रभु आओ आओ आओ आओ
आओ आओ आओ आओ आओ जी
प्रभु आओ आओ आओ आओ
आओ आओ आओ जी(जनम) (मैं हरि)

Mein Hari caraNan kI dASI (Mein Hari)                                                                
Malin vishaya raS tyAgE jagakE
rAmanAm raSa pyAsI
janam janam kI dASI (Mein Hari) 

dukh apamAn kashTa sab sahiyA
kuThil jagat kI hASI
mIrA kahE prabhU Giridhar nAgara
kATO jagat kI FAnsI (janama)  (Mein Hari) 

AO prItam Sundara nirUpam (2)                         
antara hOt udASI
mAnat nahIn man dhIraj mOhan
taDapat nitadin rASI (mAnat)
SAnvariyA mOhanIyA nAgariyA mErO piyA
prabhu AO AO AO AO
AO AO AO AO AO jI
prabhu AO AO AO AO
AO AO AO jI (janam) (Mein Hari) 
                  

தேஷ்/மாயாமாளவகௌளை               ஆதி         ('கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா மெட்டு)

மலை எல்லாம் திருமலை போலாகுமா?
மாதவா உனக்கிணை ஈடாகுமா? (மலை)

சிலை வடிவாகி நின்றாய் ஸ்ரீனிவாஸா
ஸ்ரீதரா, தாமோதரா, ஸ்ரீ வேங்கடேஷா (மலை)

பற்றென்று காட்டி நிற்கும் வலது கரம்
பற்றிட அரவணைக்கும் தாயின் உள்ளம்
முற்பிறவிகளில் செய்த வினை முறியும் தலம்
முகில் வண்ணன் அரசாளும் திருவேங்கடம் (மலை)

தேவாதி தேவனின் ஸன்னிதானம்
தேவியர் கொலுவிருக்க திருக்கல்யாணம்
நாவார புகழ் பாடும் நல் வரம் தா
நாராயணா , ஹரி, கோவிந்தா (மலை)

dEsh/MAyAmALavagauLai         Adi    (Can sing in the tune 'KallellAm Manikka')

Malai ellAm tirumalai polAgumA?
MAdhavA unakkiNai IDagumA? (Malai)

silai vaDivAgi ninRAi SrInivASA
SridharA, damOdarA, ShrI VenkatEshA (Malai)

PaRRenRu kATTi niRkum valadu karam
PaRRiDa aravaNaikkum tAyin uLLam
MuRpiRavigaLil seyda vinai muRiyum talam
Mugil vaNNan arasALum tiruvEnkaTam (Malai)

dEvAdi dEvanin SannidAnam
dEviyar koluvirukka tirukkalyANam
nAvAra pugazh pADum nal varam tA

nArayaNa, Hari, GovindA (Malai)

No comments:

Post a Comment