Tuesday, October 4, 2011

nalam tarum nAyakiyAy

Today's posting is a song on all three sakthis, durgA, lakshmi and SaraSwati and also the last of the triple compositions. Let us sing this or hear and pray for the energy required to fight problems and concerns that may arise from time to time in our lives:


Lyrics 


rAgamAlikai   Adi   PerambUr   19.09.2011   05.30PM
 
pallavi
 
shaNmukhapriyA
 
nalam tarum nAyakiyAy nam uLLattil kuDi koNDu
pagai tanai vellum sakti tarubavaL srI durgai
 
saraNam  

BUbALam
 
vazhipaDum aDiyavarait tan kaDaikkaNNAl pArttu
akshaya sampattu aruLbavaL srI dEvi
 
maduvanti                                     
 
kalviyin karaiyAm avaLai ninaippavarkku
kalaigaL naRguNam aLippavaL srI SaraSvati
 
madyamAvati
 
navarAtri dEviyar mUvaraiyum enRum
vaNangip paNindu peRRiDuvOm mangaLam.






ராகமாலிகை  ஆதி  பெரம்பூர் 19.09.2011  05.30PM

பல்லவி

ஷண்முகப்ரியா

நலம் தரும் நாயகியாய் நம் உள்ளத்தில் குடி கொண்டு
பகைதனை வெல்லும் சக்தி தருபவள் ஸ்ரீ துர்கை

சரணம்

பூபாளம்

வழிபடும் அடியவரைத் தன் கடைக்கண்ணால் பார்த்து
அக்ஷய சம்பத்து அருள்பவள் ஸ்ரீ தேவி

மதுவந்தி

கல்வியின் கரையாம் அவளை நினைப்பவர்க்கு
கலைகள் நற்குணம் அளிப்பவள் ஸ்ரீ ஸரஸ்வதி

சரணம்

மத்யமாவதி

நவராத்ரி தேவியர் மூவரையும் என்றும்
வணங்கிப் பணிந்து பெற்றிடுவோம் மங்களம்.

Copyrighted 

Monday, October 3, 2011

mangaLam aLippAL mahAlakshmi

The second song that was composed immediately is on Goddess MahAlakshmi, the goddess of wealth and one of the associates of dEvi durgA. To destroy evil, we need, not only strength, but also strategy (intelligence) as well as wealth (resources). While durgA is the embodiment of strength (sakthi), lakshmi is the embodiment of wealth (resources) and SaraSvati is the embodiment of intelligence. This is the significance of dEvi's fight with MahishASura and his ultimate destruction. Let us pray goddess lakshmi too on the eve of navarAtri.


Lyrics



kalyANi    rUpakam   Perambur  07.09.2011   05.30 PM                        
 
Pallavi
 
mangaLam aLippAL mahAlakshmi
tangumiDam ellAm danangaLaip pozhindu (mangaLam)
 
a. pallavi
 
nADiDum anbarukku nambikkaiyAy ninRu  
vAzhvil anaittilum veRRiyait taruvAL (mangaLam)
 
saraNam
 
sentAmarai mI....damarndu manda...hAsa
vadanamuDan dayai purindiDuvAL
iga para vAzhvai viTTu avaLai aDaindAl
piRavip piNi agaRRi naRgati tandiDuvAL (mangaLam)





கல்யாணி    ரூபகம்   பெரம்பூர் 07.09.2011   05.30 PM                        

பல்லவி

மங்களம் அளிப்பாள் மஹாலக்ஷ்மி
தங்குமிடம் எல்லாம் தனங்களைப் பொழிந்து (மங்களம்)

அ. பல்லவி

நாடிடும் அன்பருக்கு நம்பிக்கையாய் நின்று  
வாழ்வில் அனைத்திலும் வெற்றியைத் தருவாள் (மங்களம்)

சரணம்

செந்தாமரை மீ....தமர்ந்து மந்த..ஹா.
வதனமுடன் தயை புரிந்திடுவாள்
இக பர வாழ்வை விட்டு அவளை அடைந்தால்
பிறவிப் பிணி அகற்றி நற்கதி தந்திடுவாள் (மங்களம்)

Copyrighted


Sunday, October 2, 2011

veN kalai uDuttit tAmarai mIdudittu

As written in the previous posting, the three songs composed by me were for the navarAtri paNDikai, as such I post one of these, on Goddess SaraSvati, to be sung on the eve of SaraSvati PUjai falling on the 5th October 2011. Hope you would enjoy and pray to Her to bestow on you all the best fine arts in the Universe and make you a master of those arts!

Lyrics


hindOLam/bImplAs     rUpakam     Perambur    18.08.2011   07.45 PM

Pallavi

veN kalai uDuttit tAmarai mIdudittu
aruLbavaL SaraSvati (veN)

a. pallavi

vINaiyaik kaiyilEndi mana iruL nIkki
gnAna oLi namakkuL perukkiDavE...(veN)

saraNam

agandanil amarndu aruLAkshi purindu
mAyai iruLagaRRi vazhitanaik kATTuvAL
kalaigaL yAvilum siRandu viLangiDa
tuNai puriyum vEda pustaka dhAriNi (veN)





ஹிந்தோளம்/பீம்ப்லாஸ் ரூபகம் பெரம்பூர் 18.08.2011 7.45 PM

பல்லவி

வெண் கலை உடுத்தித் தாமரை மீதுதித்து
அருள்பவள் ஸரஸ்வதி (வெண்)

அ. பல்லவி

வீணையைக் கையிலேந்தி மன இருள் நீக்கி
ஞான ஒளி நமக்குள் பெருக்கிடவே...(வெண்)
                       
சரணம்

அகந்தனில் அமர்ந்து அருளாக்ஷி புரிந்து
மாயை இருளகற்றி வழிதனைக் காட்டுவாள்
கலைகள் யாவிலும் சிறந்து விளங்கிட
துணை புரியும் வேத புஸ்தக தாரிணி (வெண்) 


Copyrighted


Saturday, October 1, 2011

kai koDuttennaik kAppvaL ranjani

The song on Goddess KAmAkshi that is posted here was composed in a spur of the moment when I was hearing a song in the rAgam ranjani, a melodious ragam that if sung with bhAvam kindles your emotions. I wanted to compose a song during navarAtri and it was surprising that I could compose three more songs in a row after this for the paNDikai. I feel that it is the grace of Goddesses durgA, lakshmi & SaraSvati. With my salutations to them, I post the song.


Lyrics


ranjani   Adi    Perambur   18.08.2011  4.30 AM
       
Pallavi

kai koDuttennaik kAppvaL ranjani
taruNam aRindu karuNaiyum purindu (kai)

a.pallavi

anjanam  tITTiya nIL vizhiyALE
tanjam aDaindOrkku taru nizhalavaLE  (kai)

saraNam

ARudal vazhangi Ananda vAzhvaLikkum
kAnci mAnagar vAzhum kalyANiyE
vanjam niRainda ulagil irundu
mukti aLikkum mOkshadAyini  (kai)




 

ரஞ்ஜனி    ஆதி    பெரம்பூர்   18.08.2011  4.30 AM
                        
பல்லவி

கை கொடுத்தென்னைக் காப்பவள் ரஞ்சனி
தருணம் அறிந்து கருணையும் புரிந்து (கை)
                      
அ.பல்லவி

அஞ்சனம்  தீட்டிய நீள் விழியாளே
தஞ்சம் அடைந்தோர்க்கு தரு நிழலவளே (கை)

சரணம்

ஆறுதல் வழங்கி ஆனந்த வாழ்வளிக்கும்
காஞ்சி மாநகர் வாழும் கல்யாணியே
வஞ்சம் நிறைந்த உலகில் இருந்து
முக்தி அளிக்கும் மோக்ஷதாயினி  (கை) 

Copyrighted