tODi/vaSantA Adi
PeTTi niRaiya PUkkoNarndu PUjippEn ambA
ishTamuDaiyOrgaL kUDi daricippOm, vArIr (PeTTI)
ishTamuDan pala pushpangaL koNarndunnai
ashTOttiram seyvEn (repeat)
KashTangaL varAmal kAppadu un kaDamai karuNASAgariyE,
IshvariyE, JagadIshvariyE, tripurEshwariyE, rAjEshwariyE (PeTTI)
Sambangi, rOjA Saharccita malarAl
SahaSrArccanai seyvEn (repeat)
vANi SaraSwati vandemai AdarippAy, vAcAmagOcariyE
SrIkariyE, ShubhAkariyE, PratApakariyE, KrupAkariyE (PeTTI)
Malligai, mullai, maruvuDan, tAzhi,
magizhampU cAmandiyum, (repeat)
alli, araLi, mullai, kadir paccai, davanamuDan, azhaguLLa pArijAtam
sokkaruDan pakkamadAy, bhaktiyuDan saktiyunai (PeTTI)
தோடி/வஸந்தா ஆதி
பெட்டி நிறைய பூக்கொணர்ந்து
பூஜிப்பேன் அம்பா,
இஷ்டமுடையோர்கள் கூடி
தரிசிப்போம், வாரீர். [பெட்டி]
இஷ்டமுடன் பல புஷ்பங்கள்
கொணர்ந்துனை
அஷ்டோத்திரம் செய்வேன் [repeat]
கஷ்டங்கள் வராமல் காப்பது உன்
கடமை கருணாஸாகரியே,
ஈஷ்வரியே, ஜகதீஷ்வரியே, த்ரிபுரேஷ்வரியே,
ராஜேஷ்வரியே. [பெட்டி]
ஸம்பங்கி, ரோஜா ஸஹர்ச்சித மலரால்
ஸஹஸ்ரார்ச்சனை செய்வேன். [repeat]
வாணி ஸ்ரஸ்வதி வந்தெமை
ஆதரிப்பாய், வாசாமகோசரியே
ஸ்ரீகரியே, ஷுபாகரியே, ப்ரதாபகரியே,
க்ருபாகரியே. [பெட்டி]
மல்லிகை முல்லை மருவுடன் தாழை
மகிழம்பூ சாமந்தியும், [repeat]
அல்லி அரளி முல்லை கதிர் பச்சை
தவனமுடன் அழகுள்ள பாரிஜாதம்
சொக்கருடன் பக்கமதாய் பக்தியுடன்
சக்தியுனை [பெட்டி]
பக்ஷமதாகவே பரிமளப் பொடியினால் லக்ஷார்ச்சனை
செய்வேன் [repeat]
அக்ஷய ஸம்பத்து அனுக்ரஹம் தந்தெமை
ஆதரித்தருள்வாயே,
ஏகாக்ஷரியே, த்ரையாக்ஷரியே,
பஞ்சாக்ஷரியே, ஷடாக்ஷரியே [பெட்டி]